‘த.வெ.க. ஆட்சியில் இருப்பதற்கு எஸ்.ஐ.ஆர் தான் காரணம்’ என பாண்டிச்சேரி பா.ஜ.க. தலைவர் அடித்துக் கூறிய நிலையில், ‘தமிழகத்தில் பா.ஜ.க. நடத்தும் நாடகத்தை’ தோலுரித்துக் காட்டியிருக்கிறார் தி.மு.க.வின் கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ்!

‘‘எல்லாம் அவன்செயல்..!’’ எனும் தலைப்பில் மருது அழகுராஜ், ‘‘எந்திர தந்திர “108-மந்திரங்” களால் அவர்களை ஆட்சியில் அமர்த்தியிருப்பது பாஜக தான் என்பதை மக்கள் உணரத் தொடங்கி விட்ட நிலையில்…

அதனை மடைமாற்றவே நயினாரை விட்டு அவ்வப்போது விஜய்யை தரம் தாழ்ந்து விமர்சிக்க சொல்வதும்…

அந்த விமர்சனத்திற்கு எதிர்வினை ஆற்றாமல் தவெகவை கடந்து போகச் சொல்வதும் என எல்லாமும் திரைக்கதை எழுதி அவர்களால் நடத்தப்படும் நாடகங்களே…

அடுத்து…
அண்ணாமலையை களமிறக்கும்
காட்சிக்கான ஒத்திகையும் ஒருபக்கம்
நடந்து வருகிறது…

கூடவே
தனுசுக்கு
மேக் அப் டெஸ்ட் வேறு…

அது சரி
தங்களுக்கு

வாக்களிக்க
மறுக்கும்
தமிழ்நாட்டு
மக்களை
பழி தீர்க்க

இன்னும்
எத்தனை
ஹீரோக்களை
வில்லன்களாக்குவதோ…

என்னநாஞ் #சொல்றது’’ என பதிவிட்டிருக்கிறார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal