தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் இன்று தொடங்கியது. புதிய கூட்டணி அமைக்கப்பட்டு, 35 அமைச்சர்களுடன் மூன்றாவது அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட 4 முக்கிய முடிவுகள்…
- தொழில் தொடங்க அனுமதி
8 நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
- சீராய்வு மனு தாக்கல்
மதமாற்றம் செய்யப்படும் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகச் சீராய்வு மனுதாக்கல் செய்யப்படும்.
- சமூக நீதி கணக்காய்வு ஆணையம் உருவாக்கம்
சமூக நீதி கணக்காய்வு ஆணையம் உருவாக்கப்படும். அடுத்த வருடம் சாதி ரீதியான கணக்கெடுப்பு நடத்த சமூக நீதி ஆய்வு நடத்தப்பட்டு, அதன் பின்பு ஆணையம் உருவாக்கப்படும்.
- தாழம்பூர் நில விவகாரம் குறித்து விசாரணை
தாழம்பூரில் இருக்கக்கூடிய 600 ஏக்கர் அனாதை நிலங்கள் இருக்கின்றன. அதில் பெரிய அளவில் புறம்போக்கு நிலங்கள் பட்டாக்களாக மாற்றப்பட்டு, 30 ஆண்டுகளாக முறைகேடுகள் நடந்து வருகின்றன. மேலும், இதற்குள் பதினைந்துக்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன.
இதில் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. உச்ச நீதிமன்றம் இதுகுறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருப்பதால், அது குறித்தும் விரைவில் விசாரணை நடத்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
