தாராபுரம் சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சத்தியபாமா 9,471 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

தாராபுரம் சட்டசபைத் தொகுதிக்கு அக்டோபர் 6-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் தவெக சார்பில் சத்தியபாமா, திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி, நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.

இந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (அக்டோபர் 9) எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் சில சுற்றுகளில் அதிமுக முன்னிலை வகித்தது. ஆனால் அடுத்தடுத்த சுற்றுகளில் தவெக முன்னிலை பெற்றது. அதிமுக 3-வது இடத்துக்குத் தள்ளப்பட்டது.

தாராபுரம் வாக்கு எண்ணிக்கை முடிவுகள்

சத்தியபாமா (தவெக) – 66,841
சுகன்யா (திமுக) – 57,370
பானுமதி (அதிமுக) – 45,280
கார்த்திகா (நாம் தமிழர் கட்சி) – 5,268
லட்சுமணன் (சிபிஐ) – 1,157
திமுக வேட்பாளர் சுகன்யாவைவிட 9,471 வாக்குகள் கூடுதலாகப் பெற்று தவெக வேட்பாளர் சத்தியபாமா வெற்றி பெற்றுள்ளார்.

மதுராந்தகம் சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் மரகதம் குமரவேல் 19,244 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

மதுராந்தகம் சட்டசபைத் தொகுதிக்கு அக்டோபர் 6-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று (அக்டோபர் 9) எண்ணப்பட்டன.

மதுராந்தகம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள்:

மரகதம் குமரவேல் (தவெக) – 70,916 வாக்குகள்
பரந்தாமன் (திமுக) – 51,672 வாக்குகள்
கணிதா சம்பத் (அதிமுக) – 46,436 வாக்குகள்
நாம் தமிழர் கட்சி – 1,753 வாக்குகள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி – 1,389 வாக்குகள்
வெற்றி வித்தியாசம்: 19,244 வாக்குகள்.
திமுக வேட்பாளர் பரந்தாமனை 19,244 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் வெற்றி பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத் 3-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal