மது​ராந்​தகம், தாராபுரம் தொகு​தி​களுக்​கான இடைத்​தேர்​தல் வாக்​குப்​ப​திவு நேற்று அமை​தி​யாக நடை​பெற்று முடிந்​தது. மது​ராந்​தகத்​தில் 86.26 சதவீதம், தாராபுரத்​தில் 80.30 சதவீதம் வாக்​கு​கள் பதி​வாகி​யிருந்​தன. இது யாருக்கு சாதகமாக அமைந்திருக்கப் போகிறது என்பதை பார்ப்போம்..!

தமிழகத்​தில் கடந்த ஏப்​ரல் மாதம் நடை​பெற்ற சட்​டப்​பேரவை பொதுத்​தேர்​தலில், மது​ராந்​தகம், தாராபுரம் தொகு​தி​களில் போட்​டி​யிட்டு அதி​முக சார்​பில் வெற்றி பெற்ற, மரகதம் குமர​வேல் மற்​றும் சத்​ய​பாமா ஆகியோர் தங்​கள் எம்​எல்ஏ பதவி​களை ராஜி​னாமா செய்​ததுடன், ஆளுங்​கட்​சி​யான தவெக​வில் இணைந்​தனர். இதையடுத்​து, இத்​தொகு​தி​களுக்கு அக்​டோபர் 6ஆம் தேதி இடைத்​தேர்​தலை தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​தது.

மது​ராந்​தகம் தொகு​தி​யில் மரகதம் குமர​வேல் (தவெக), பரந்​தாமன் (தி​முக), கணிதா சம்​பத் (அதி​முக), சுகந்தி (மார்​க்சிஸ்ட், ஜானகி​ராமன் (நாதக) உள்​ளிட்ட 28 பேர் களத்​தில் இருந்​தனர். அதே போல், தாராபுரம் தொகு​தி​யில் சத்​ய​பாமா ( தவெக), சுகன்யா (தி​முக), பானு​மதி (அதி​முக), லட்​சுமணன் (இந்​திய கம்​யூனிஸ்ட்), கார்த்​தி​கா(​நாதக) உள்​ளிட்ட 22 பேர் களத்​தில் இருந்​தனர்.

அக்​டோபர் 4 – ம் தேதி மாலை​யுடன் தேர்​தல் பிரச்​சா​ரம் முடிவுற்ற நிலை​யில், நேற்று காலை 7 மணி முதல் இரண்டு தொகு​தி​களி​லும் வாக்​குப்​ப​திவு தொடங்​கியது. மது​ராந்​தகத்​தில் காலை 2 மணி நேரம் வாக்​குப்​ப​திவு மந்​த​மான நிலை​யிலேயே இருந்து வந்​தது. மேலும், ஏழு இடங்​களில் இயந்​திரங்​கள் பழுது காரண​மாக வாக்​குப்​ப​திவு தாமத​மாக தொடங்​கியது. பின்​னர், பிற்​பகலுக்கு மேல் வாக்​குப்​ப​திவு விறு​விறுப்பை எட்​டியது. ஆண்​கள், பெண்​கள் என பொது​மக்​கள் நீண்ட வரிசை​யில் நின்று வாக்​களித்​தனர்.

தாராபுரம் தொகு​தி​யில் நேற்று காலை முதலே நீண்ட வரிசை​யில் நின்று வாக்​காளர்​கள் ஆர்​வத்​துடன் வாக்​களித்​தனர். கவுண்​டச்சி புதூர் வாக்​குச்​சாவடி​யில் திமுக​வில் இருந்து தவெக​வுக்கு தாவிய நபர் தவெக சார்​பில் பூத் ஏஜெண்​டாக நியமிக்​கப்​பட்​டதற்கு திமுக​வினர் எதிர்ப்பு தெரி​வித்​தனர். இதனால் சுமார் 1 மணி நேரம் அந்த வாக்​குச் சாவடி​யில் வாக்​குப் பதிவு நிறுத்​தப்​பட்​டது. மாலை 6 மணிக்கு வாக்​குப்​ப​திவு நிறைவடைந்​தநிலை​யில்​,​இறுதி நேரத்​தில் வந்த வாக்​காளர்​களுக்​கு, டோக்​கன் வழங்​கப்​பட்டு வாக்​களிக்க அனு​ம​திக்​கப்​பட்​டனர். வாக்​குப்​ப​திவு நிறைவடைந்​ததும், வாக்​குஎண்​ணிக்கை மையங்​களுக்கு இயந்​திரங்​கள் அனுப்பி வைக்​கப்​பட்​டன.

இறுதி நில​வரப்​படி மது​ராந்​தகம் தொகு​தி​யில் 86.26 சதவீத​மும், தாராபுரத்​தில் 80.30 சதவீத​மும் வாக்​கு​கள் பதி​வாகி​யிருந்​தன. கடந்த ஏப்​ரலில் நடை​பெற்ற பொதுத்​தேர்​தலில் மது​ராந்​தகத்​தில் 92.30 சதவீத​மும், தாராபுரத்​தில் 89.9 சதவீத​மும் வாக்​கு​கள் பதி​வா​யிருந்த நிலை​யில், தற்​போது இடைத்​தேர்​தலில் வாக்​குப்​ப​திவு குறைந்​துள்​ளது குறிப்​பிடத்​தக்​கது. வரும், அக்​டோபர் 9ம்​ தேதி வாக்​கு எண்​ணிக்​கை மையங்​களில்​ காலை 8 மணி முதல்​ வாக்​கு​கள்​ எண்​ணப்​பட்​டு அன்​று மாலைக்​குள்​ முடிவு​கள்​ அறிவிக்​கப்​பட உள்​ளன.

பொதுவாக முந்தைய சட்டசபை தேர்தலை ஒப்பிடும்போது அடுத்த சட்டசபை தேர்தலில் வாக்குப்பதிவு குறைந்தால் அது ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். வாக்குப்பதிவு அதிகரித்தால் அது ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலையாக பார்க்கப்படும். இந்த கணிப்பு பல தேர்தல்களில் அப்படியே பலித்துள்ளது. ‘எஸ்.ஐ.ஆர்.’ எனும் வாக்காளர் பட்டியலுக்கு பிறகு பீகாரில் மட்டும் இது மாறியது.

மதுராந்தகம் தொகுதியை எடுத்து கொண்டால் இறுதி நிலவரப்படி மதுராந்தகம் சட்டசபை தொகுதியில் இன்று 85.90 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. கடந்த ஏப்ரல் 23 சட்டசபை தேர்தலில் இந்த தொகுதியில் 92.28 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. இதனை ஒப்பிட்டு பார்த்தால் இந்த முறை 6.38 சதவீதம் வரை ஓட்டுப்பதிவு குறைந்துள்ளது.

அதேபோல், தாராபுரம் சட்டசபை தொகுதிகளில் 80.31 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. கடந்த ஏப்ரல் 23ம்தேதி நடந்த சட்டசபை தேர்தலில் இந்த தொகுதியில் மொத்தம் 88.53 சதவீதம் அளவுக்கு வாக்கு பதிவாகி இருந்தது. இதனை ஒப்பிடும்போது இந்த முறை 8.22 சதவீதம் வரை ஓட்டுப்பதிவு சரிந்துள்ளது.

இதனால் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 சட்டசபை தொகுதிகளிலும் ஆளும் கட்சியின் வேட்பாளர்களுக்கு சாதகமாக ரிசல்ட் வரலாம் என சொல்லப்படுகிறது. இருப்பினும் நாம் ஒரு விஷயத்தை மனதில் வைத்து கொள்ள வேண்டும். அது என்னவென்றால் கடந்த சட்டசபை தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் சேர்ந்தார். தற்போது அவரே மீண்டும் தவெக வேட்பாளராக போட்டியிட்டுள்ளார்.

அதேபோல், கடந்த சட்டசபை தேர்தலில் தாராபுரம் தொகுதியில் அதிமுகவில் வெற்றி பெற்று எம்எல்ஏவான சத்யபாமா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தார். தற்போது அவரே தவெக சார்பில் போட்டியிட்டுள்ளார். வெற்றி பெற்றவுடனே இருவரும் அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததால் இருவருக்கும் களத்தில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், மக்களின் மனநிலை என்னவாக உள்ளது? என்பது புரியாத புதிராக உள்ளது. வாக்குப்பதிவு குறைந்து இருந்தால் வாக்களித்தவர்கள் தவெக வேட்பாளர்களுக்கு எதிராக ஓட்டு செலுத்தி இருந்தால் ரிசல்ட் மாற வாய்ப்புள்ளது. இதனால் இந்த 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன.

குறிப்பாக ‘திருமங்கலம் ஃபார்முலா’வுக்கு இந்த இடைத்தேர்தல் முற்றுப்புள்ளி வைத்திருப்பதால் மக்களின் உண்மையான மனநிலையை உளவுத்துறையால் கூட கணிக்க முடியவில்லை என்பதுதான் உண்மையான நிலவரம்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal