தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதியம் 1 மணி நிலவரப்படி, மதுராந்தகத்தில் 55.19%, தாராபுரத்தில் 56.09% வாக்குப்பதிவாகி உள்ளது.
வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 9-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேல் (தவெக), பரந்தாமன் (திமுக), கணிதா சம்பத் (அதிமுக), சுகந்தி (மார்க்சிஸ்ட்), ஜானகிராமன் (நாம் தமிழர்) மற்றும் சுயேட்சைகள் உட்பட 27 பேர் களத்தில் உள்ளனர்.
அதேபோல், தாராபுரம் தொகுதியில் சத்யபாமா (தவெக), சுகன்யா(திமுக), பானுமதி (அதிமுக), லட்சுமணன் (சிபிஐ), கார்த்திகா (நாதக) உட்பட 22 பேர் போட்டியிடுகின்றனர்.
