‘‘திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் உள்ள 4,000 திருக்கோவில்களில் குடமுழுக்கு நடந்துள்ளது’’ என முதல்வர் ஸ்டாலின் அப்போது பெருமிதமாக பேசியிருந்தார்.

த.வெ.க. ஆட்சிக்கு வந்த பிறகு பழனி கோவில் நில முறைகேடு, மதுரை கோவில் குடமுழுக்கு விழாவில் பக்தர்கள் குமுறல் என தொடர்ச்சியாக அதிருப்திக் குரல்கள் எழுந்து வருகிறது.
இந்த நிலையில்தான் தி.மு.க.வின் கொள்கை பரப்புத் துணைத் தலைவர் மருது அழகுராஜ் தனது வலைதளப் பக்கத்தில், ‘கோலி விளையாடுபவரிம் கோவில்களை கொடுத்த மாதிரி இருக்கிறது’’ என ஆவேசமான பதிவை பதிவிட்டிருக்கிறார்.

மருது அழகுராஜ் தனது வலைதளப்பக்கத்தில், ‘‘சிவசிவா’’ எனும் தலைப்பில்,
‘‘முரட்டு பக்தர் சேகர்பாபு அறநிலையத்துறை அமைச்சராக இருந்தபோது…
ஆலயச் சொத்துக்களை பாதுகாத்தார் முருகன் மாநாடு வள்ளலார் மாநாடு என மாநாடுகள் கூட்டினார்..!
குடமுழுக்கு வைபவங்களை மிகச் சிறப்பாக நடத்தினார்…
ஆனால்
முறுக்கு பக்தர் ரமேஷின் நிர்வாகத்திலோ ஆங்காங்கே ஆலயச் சொத்துக்களை ஆட்டயப் போடுவது அன்றாடக் கதையாகி வருகிறது….
மேலும்…
குடமுழுக்கு நிகழ்ச்சிகளில் பிளாக் டிக்கெட் விற்பது பைப்படி தண்ணீரை பிடித்து பக்தர்கள் தலையில் தெளிப்பது
செருப்பு காலோடு கோபுரம் ஏறுவது என கோவில்களை கொண்டு போய்…
கோலி விளையாடும் பையனிடம் கொடுத்த கதையாகி வருகிறது…
