தி.மு.க. ஆட்சியில் ‘பார்ட்டி ஃபண்ட்’ என்ற பெயரில் கோடிக்கணக்கில் வசூல் நடந்ததாக சட்டப்பேரவையிலேயே முதல்வர் விஜய் குற்றச்சாட்டு வைத்தார். இதற்கு தி.மு.க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில்தான் தவெக ஆட்சியில் ‘மினிஸ்ட் ஃபண்ட்’ வசூலிப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி காலை 10 மணியிலிருந்து மதியம் ஒரு மணி வரை பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்து துறை இன்ஜினியர்கள் கூட்டத்தை கூட்டி ரொம்ப வீரியமாக நடத்தி இருக்கிறார் அமைச்சர். இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர், ‘‘ பொதுப்பணித்துறை மாவட்ட அலுவலர்கள் எல்லாம் ஒரே காம்பவுண்டுக்குள் வரவேண்டும். வெளிநாடுகளில் உள்ளது போல் நாம் அதை தரமாக மாற்ற வேண்டும். நம் துறை டெண்டர்கள் எல்லாம் ஓப்பனாக வெளிப்படையாக இருக்க வேண்டும். எந்தவிதமான கரப்ஷனும் கமிஷனும் இருக்கவே கூடாது’’ என மேடையில் உட்கார்ந்து பாடம் எடுக்கிற மாதிரி கிளாஸ் எடுத்து இருக்கிறார்.

எல்லாவற்றையும் கேட்டுவிட்டு இந்த கூட்டம் முடிந்து வெளியே வந்த இன்ஜினியர்கள் எல்லாம் அவர்களுக்குள் என்ன பேசிக்கொண்டார்கள் என்றால் ‘‘துறையில புதுத்திட்ட பணிகளுக்கு அரசாங்கத்துல நிதியே ஒதுக்கலையா? இதுல எங்க இருந்து பாரின் லெவலுக்கு நம்ம கொண்டு வரதான். நாலு மாசமா எந்த வேலையும் இல்லாம வெறும் மீட்டிங் மட்டுமே நடத்திட்டு இருக்காங்க. அமைச்சர் பேசுறாரு நாம வந்து உட்கார்ந்து கேட்டுட்டு போறோம். வேற என்னயா பண்றது அவரு பாட்டுக்கு மீட்டிங் போட்டுட்டே இருக்கட்டும். நாமளும் வந்து அப்படியே ஆகட்டும் ஐயா அப்படின்னு சொல்லிட்டு போவோம்’’என நக்கலாக கமெண்ட் அடித்து விட்டு போயிருக்கிறார்கள்.

ஆனால் இதில் முக்கியமான விஷயம் அதுவல்ல. அடுத்த நாள் செப்டம்பர் 23ஆம் தேதி காலையில் முக்கியமான உயரதிகாரிகளுக்கு அவசர அவசரமாக ஒரு போன் போயிருக்கிறது. போனை போட்டது வேற யாரும் இல்லை. அமைச்சர் ஆஆபீஸில் இருந்துதான். ‘‘எந்த தப்பும் வெளியில தெரியிற மாதிரி செய்ய வேணாம். ரொம்ப பார்த்து கவனமா டீல் பண்ணுங்க’’ என அதிகாரிகளுக்கு அவசர அறிவுறுத்தல் கொடுத்து அலற வைத்திருக்கிறார்கள். இது வேற தலைவலியா என அதிகாரிகள் ஆடி போயிருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் நீர்வளத்துறையில் இதுவரை கூறப்பட்டிருக்க டெண்டர்கள் அனைத்தையும் அவசர அவசரமாக கேன்சல் செய்யப்பட்டு அக்டோபர் ஏழாம் தேதி அன்று புது டெண்டர்கள் ஓபனாகப் போகிறது.

ஆனால் அங்கதான் ஒரு மெகா ட்விஸ்ட் நடக்கப்போகிறது. அந்த ஏழாம் தேதி விடப்போகிற அந்த டெண்டரில் டீலிங்கை ரகசியமாக வைத்துக் கொள்ளுங்கள். மினிஸ்டர் ஃபண்ட் 15% ஆபீசர்ஃபண்ட் 5% என சேர்த்து கொள்ளச் சொல்லி ஒப்பந்ததாரர்களிடம் மறைமுகமாக சொல்லி விடுங்கள் என அதிகாரிகளுக்கு மேலிடத்தில் இருந்து புதிதாக உத்தரவு போயிருக்கிறது. ஒரு தவறு நடக்கிறது என சுட்டிக்காட்டினால் அந்த தவறை செய்ய மாட்டார்கள் எனப் பார்த்தால் அதை எப்படி வேற மாதிரி செய்யலாம் என பிளான் போட்டு இருக்கிறார்கள்.

தி.மு.க.வின் விஞ்ஞான ஊழலையே மிஞ்சிவிடுவார்கள் போலவே..?

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal