திமுக முன்னாள் அமைச்சர் ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த், தவெகவில் இணைந்த நிலையில் அவருக்கு கட்சியின் துணை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
அண்மையில் தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எம்.எஸ்.எம். ஆனந்தன், எம்.சி.சம்பத், உடுமலை ராதாகிருஷ்ணன், கே.வி. ராமலிங்கம், எம். ஆனந்தன், கடம்பூர் ராஜு, பச்சைமால், வெல்லமண்டி நடராஜன், சிவபதி, வைகைச் செல்வன், எஸ்.வளர்மதி ஆகியோருக்கு துணை பொதுச் செயலாளர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
அது போல் திமுக எம்பி ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்தும் தவெகவில் இணைந்திருந்தார். அவருக்கும் துணை பொதுச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 4-ஆம் தேதி முதல்வர் விஜய் முன்னிலையில் சந்தீப், தவெகவில் இணைந்திருந்தார். இவருக்கு பதவி அளிக்கப்பட்டது வரவிருக்கும் தேர்தல்களில் வட மாவட்டங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது. வன்னியர் சமூகத்தில் செல்வாக்கு அதிகம் கொண்டதால் சந்தீப்புக்கு இந்த பெரிய பதவி வழங்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
