‘தமிழக சட்டமன்றம் சண்டை மன்றமாக இருக்கிறது மக்கள் பிரச்னைகளை பேச முடியவில்லை’ என தே.மு.தி.க. தலைவர் பிரேமலதா பேசிய நிலையில், ‘நேரலை’ என்ற பெயரில் ‘நேர் கொலை’ செய்து வருகிறார்கள் என தி.மு.க. கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ் தனது ஆதங்கத்தை பதிவிட்டுள்ளார்.

‘‘#மாண்புமிகு #பேரவை # கனவான்களே..?’’ என்ற தலைப்பில் மருது அழகுராஜ் தனது வலைதளப்பக்கத்தில்,
‘‘பேரறிஞர், மூதறிஞர், பெருந்தலைவர், திருக்குறளார், கலைஞர், புரட்சித் தலைவர் இப்படி அறிவும் ஆற்றலும் பண்பும் பரிவும் நிறைந்தோர் காலத்தில் தமிழகத்தின் சட்டமன்ற நிகழ்வுகளை நேரலை செய்வதற்கான வாய்ப்பின்றி போனது சமூத்திற்கான இழப்பு என்றால்…
இன்று பிதற்றலும் நீக்கலும் சரிசமமாக இருக்கும் தமிழக “சப்த” மன்றத்தின் நிகழ்வுகளை நேர் கொலை மன்னிக்கனும் நேரலை செய்வது எரிச்சலையே தருகிறது…

அதிலும் குறிப்பாக முஸ்தபா, ராஜ்மோகன், வன்னியரசு, ஆதவ் அர்ஜூனா இவர்கள் வாயை தொறந்தாலே சாதி தான் மதம் தான்…
தங்கள் வீட்டுக்கே இவர்கள் சாதிப்பூ தான் வாங்கிட்டு போவாங்க போல…
சாதி என்பதே கால் முளைத்த சதியே என்பதை மக்கள் அறிவார்கள்…
அதனால அதை கடந்து வாங்க
ஆக்க பூர்வமாக பேசுங்க…
ஆளும்கட்சி
என்கிற
பொறுப்புணர்ந்து
பொறுமையா
பேசுங்க…
முடியாதுன்னா
அந்த
கேமராவை
ஆஃப் செய்து
வச்சிட்டு
தொடருங்க…
