தமிழக சட்டப் பேரவையில் ‘மலைகள் மாயமானது’ குறித்து கனிமவளத்துறை அமைச்சர் பேசியதற்கு, தி.மு.க.வின் கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ் பதிலடி கொடுத்திருப்பதுதான் வலைவளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றிய அமைச்சர் பிரபு, “காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பை கேள்விப்பட்டிருப்பீர்கள், காணாமல் போன மலைகளை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தமிழ்நாட்டில் பல குன்றுகள் காணாமல் போயுள்ளன. இவை அனைத்தையும் 320 கோடி ஆண்டுகள் பழமையானவை.
மனிதர்கள் வருவதற்கு முன்பே, இந்த பூமியில் தோன்றிய குன்றுகள். மனித இனம் தோன்றுவதற்கு முன்பே உருவான சுமார் 300 முதல் 320 கோடி ஆண்டுகள் பழமையான எண்ணற்ற குன்றுகளும் மலைகளும் தமிழ்நாட்டில் காணாமல் போயுள்ளன. தான் காட்டியது ஒரு சிறு மாதிரி மட்டுமே என்றும், மாநிலம் முழுவதும் இயற்கை வளம் சுரண்டப்பட்டதற்கு இதுவே சான்று’’ என்றும் அவர் அவையில் சுட்டிக்காட்டினார்.
‘‘அதானே’’
என்ற தலைப்பில் மருது அழகுராஜ் தனது வலைதளப்பக்கத்தில்,
‘‘குன்றுகள் மலைகள்
காணாமல்
போய் விட்டதாக
சட்டமன்றத்தில்
படம் காட்டியிருக்கும்
‘பல்’ டாக்டருக்கு தெரியாதோ…
அப்படிப்பட்ட
பல மலைகளை
இன்று வரையில்
விழுங்கிக் கொண்டிருக்கும் அந்த
‘‘கல்’’ டாக்டரை
கட்சியில் சேர்த்துள்ள
தங்கள் தலைமை
அந்த மலை
விழுங்கியைத் தான்
விராலி”மலை” க்கு வேட்பாளர்
ஆக்கப் போகிறது என்பது…
இப்பச் சொல்லுங்க
தங்கத்தை
தரம் பார்த்து சொல்ல
உறைகல்லுக்குத் தானே
உரிமை உண்டு..!
