சட்டமன்றத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ‘போதைப் பொருட்களை ஒழிக்க த.வெ.க. அரசு நிதி ஒதுக்கியிருக்கிறது. தி.மு.க. என்ன செய்திருக்கிறது-..?’ என கேள்வி எழுப்பியிருந்தார்.
‘த.வெ.க.வின் போதை ஒழிப்பு என்பது வெற்று வசனமே!’ என்று ஆவேசமாக பதிவிட்ட தி.மு.க.வின் கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ், ‘முதலில் இதைச் செய்யுங்க…’ என வலைளத்தில் பதிவிட்டிருப்பதுதான் வைராலாகி வருவதோடு இளைஞர்களை சிந்திக்க வைத்திருக்கிறது.
தி.மு.க.வின் கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ் தனது வலைதளப் பக்கத்தில் ‘‘முதலில் இதைச் செய்யுங்க..!’’ எனும் தலைப்பில்,
‘‘போதையை
ஒழிப்பதுதான்
நேர்மையான
நோக்கம் என்றால்…
புகைப்பிடிப்பது போன்ற
தன்னோட படத்தை
கையில்
பச்சை குத்தியிருக்கும்
அமைச்சரிடம்
முதலில் அதை
அழிக்கச்
சொல்லனும்!
அப்படியே
கிரிக்கெட் ஸ்டேடியத்தில் அமர்ந்து
பவுடர் நுனுக்கிய
அந்த இன்னொரு
அமைச்சரை
அமைச்சரவையிலிருந்தே
நீக்கச் சொல்லனும்!
அதுமட்டுமல்லாமல்
போதையையே
தன் திரைப்படங்கள்
மூலமாக
இளைஞர்களுக்கு
தான் காட்டிய
பாதையாக்கிய
தனது செயலுக்கு
நீங்க முதலில்
வருத்தம்
தெரிவிக்கனும்!
இதையெல்லாம்
செய்யாமல்
போதையை ஒழிக்கிறேன் என்பதெல்லாம்
வெற்று வசனம் தானே..!
என்ன நாஞ் சொல்றது’’ என பதிவிட்டிருக்கிறார் மருது அழகுராஜ்!
எம்.ஜி.ஆரை ரோல் மாடாலாக நினைத்து அடிக்கடி பேசும் முதல்வர் முதல் த.வெ.க. அமைச்சர்கள் வரை அவரது திரைப்படத்தில் புகை, மது பிடிக்கும் காட்சிகள் இருக்கிறாதா? என்பதை சிந்தித்துப் பார்த்திருக்கிறார்களா..?
