முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேலை நியமித்து முதன்மைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகவும் தவெகவின் செய்தித் தொடர்பாளராகவும் இருந்து வருகிறார்.
முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரி (Special Officer – Political Wing) பதவி என்பது அரசியல் மற்றும் நிர்வாக ஒருங்கிணைப்பை கவனிக்கும் முக்கிய பொறுப்பாக கருதப்படுகிறது.

இந்தப் பொறுப்பில் இருப்பவர் பொதுவாக முதல்வரின் அரசியல் நடவடிக்கைகள், கட்சி தொடர்புகள் மற்றும் தகவல் பரிமாற்றங்களை ஒருங்கிணைப்பார். அவரின் முக்கிய பணிகள் பின்வருமாறு இருக்கலாம். முதல்வரின் அரசியல் நிகழ்ச்சிகள் மற்றும் சந்திப்புகளை ஒருங்கிணைத்தல் கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சிகள் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்களுடன் தொடர்பு பேணுதல் அரசியல் நிலவரங்கள் குறித்து முதல்வருக்கு தகவல் மற்றும் ஆலோசனை வழங்குதல் ஊடகங்களில் வெளியாகும் அரசியல் செய்திகள் மற்றும் எதிர்வினைகளை கண்காணித்தல் கட்சியின் செய்தி பரப்பல் மற்றும் பொது தொடர்பு நடவடிக்கைகளில் உதவுதல் தேர்தல் மற்றும் அரசியல் தந்திர ஆலோசனைகளில் பங்கேற்பது முதல்வரின் அலுவலகம் மற்றும் கட்சி அமைப்புகளுக்கு இடையே இணைப்புப் பாலமாக செயல்படுதல் இந்தப் பதவி அதிகாரப்பூர்வ நிர்வாகப் பொறுப்பையும், அரசியல் நம்பகத்தன்மையையும் ஒருங்கே கொண்டதாக பார்க்கப்படுகிறது.
யார் இந்த ராதன் பண்டிட்?
இவர் 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஜோதிடம், எண் கணிதம் (ழிuனீமீக்ஷீஷீறீஷீரீஹ்) மற்றும் தியானம் ஆகியவற்றில் அனுபவம் பெற்றவர். ஆரம்பத்தில் பண்டிட் வெற்றிவேல் என்று அழைக்கப்பட்ட இவர், 2008-ல் டெல்லிக்கு இடம்பெயர்ந்த பிறகு தனது பெயரை ராதன் பண்டிட் என மாற்றிக் கொண்டார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆன்மீக ஆலோசகராகவும் இருந்ததாகக் கூறப்படுகிறது. 1991-ல் ஜெயலலிதாவின் வெற்றியை இவர் துல்லியமாகக் கணித்தவர்.
விஜய் குறித்த முக்கிய கணிப்புகள்:
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் சூழலில், விஜய்யின் அரசியல் எதிர்காலம் குறித்து இவர் வழங்கிய கணிப்புகள் வைரலாகின.
விஜய்யின் ஜாதகம் மிகவும் வலிமையானது என்றும், அது தமிழக அரசியலில் ஒரு “சுனாமி” போன்ற மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் இவர் குறிப்பிட்டுள்ளார்.
2026 தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 140 முதல் 170 இடங்களைப் பிடித்து ஆட்சி அமைக்கும் என்றும், விஜய் முதலமைச்சராவார் என்றும் இவர் கணித்திருந்தார்.
தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியின் பெயர் விஜய்யின் பிறந்த தேதி மற்றும் எண் கணிதத்திற்கு மிகத் துல்லியமாகப் பொருந்துவதாக இவர் கூறியிருந்தார்.
விஜய் ஒரு தீவிரமான முருக பக்தர் என்றும், அவரது ஆட்சியில் தமிழகக் கோயில்கள் உலகத் தரத்திற்கு உயர்த்தப்படும் என்றும் இவர் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
