சென்னையில் கிரிம்ஸ் ரோட்டில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் சேர்க்கப்பட்டுள்ளார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் தினமும் நடைபயிற்சி செல்வது வழக்கம். இன்று நடைபயற்சியின் போது உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் கிரிம்ஸ் ரோட்டில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இது குறித்து அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காலை நடைபயிற்சியின் போது தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு லேசான தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது.

இதனால் மருத்துவ பரிசோதனைகளுக்காக கிரிம்ஸ் ரோட்டில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடந்து வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக அண்ணா அறிவாலயத்தில் அ.தி.மு.க.விலிருந்து விலகி அன்வர்ராஜா முதல்வர் தலைமையில் தி.மு.க.வில் இணைந்தார். இதன் பிறகுதான் முதல்வர் மருத்துவமனைக்குச் சென்றார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal