‘வருகிற செப்டம்பர் மாத இறுதிக்குள் பிளவுபட்ட அ.தி.மு.க. ஒன்று சேர்ந்து வெற்றி பெறும்’ என முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் கூறியிருக்கிறார்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் செய்தியாளர்கள் சந்திப்பில், ‘‘ வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் பிரிந்து கிடக்கும் அதிமுக ஒன்று சேர்ந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்.
மேலும், செப்டம்பர் 4ம் தேதி ஓ.பி.எஸ்., தலைமையில் நடக்கப் போகும் மாநாட்டில் பலரும் பங்கு பெறுவார்கள். செப்டம்பர் மாதம் இறுதிக்குள் பிளவுபட்டு கிடக்கும் அதிமுக ஒன்றுபட்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறும்’’இவ்வாறு அவர் கூறினார்.
