அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று பிறப்பித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ஏற்கனவே ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு எடப்பாடி பழனிசாமிக்கு கொடுக்கப்பட்டு வந்தது. சமீபத்தில் அவரது வீட்டிற்கு மூன்று முறை வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

தவிர, ஜூலை 7ம் தேதி முதல் ‘தமிழகத்தை காப்போம்… தமிழகத்தை மீட்போம்’ என தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார். இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கும்படி எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.உதயகுமார் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத் தக்கது.

இந்த கோரிக்கையை ஏற்று மத்திய உள்துறை அமைச்சகம் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal