‘‘முன்னாள் முதல்வர் எடப்பாடியாரை கொச்சைப்படுத்தும் விதமாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கார்ட்டூன் வரைந்து கருத்து வெளியிட்டு இருக்கிறார். அவர்வே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டை எஸ்.பி.யிடம் புகார் அளித்திருக்கிறார்.
புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்துவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்,
‘‘கீழடி ஆய்வுக்காக நிதி ஒதுக்கியது ஜெயலலிதா அரசு. அருங்காட்சியகம் அமைக்க நிதி ஒதுக்கியது எடப்பாடியார் அரசு. எடப்பாடி பழனிச்சாமி முன்னாள் முதலமைச்சர். இப்போது எதிர்க்கட்சித் தலைவர். 2026 இல் அவர்தான் முதலமைச்சராக வரப் போகிறார். அப்பேர்ப்பட்ட தலைவரை கேலிச்சித்திரம் வரைந்து தமிழ்நாடு அமைச்சர் டிஆர்பி ராஜா தனது கருத்துக்களை வெளியிட்டு இருக்கிறார்.
அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்திருக்கிறோம்’’ என்று முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் பேட்டி அளித்தார்.
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருடன் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் வைரமுத்து உட்பட கட்சி தொண்டர்கள் ஏராளமானவரை அழைத்து வந்திருந்தார்.