தமிழக விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் ‘விளம்பர மாடல்’ தி.மு.க அரசு என த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் திமுக அரசை கடுமையாக சாடியுள்ளார்.

தமிழ்நாட்டில் தனியார் ஏஜென்டுகளை நியமித்து, விவசாயிகளிடம் இருந்து நெல்லைக் கொள்முதல் செய்தது. ஆனால், மூன்று மாதங்களுக்கு மேலாகியும், கொள்முதல் செய்த நெல்லுக்கான விலையை விவசாயிகளுக்குக் கொடுக்கவில்லை. 811 கோடி ரூபாய்க்கு நெல்லை கொள்முதல் செய்துவிட்டு, விவசாயிகளுக்கு பணத்தை பெற்றுத் தராமல் மூன்று மாதங்களுக்கும் மேலாக இழுத்தடித்து கபட நாடகம் நடத்துகிறது தி.மு.க அரசு என குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக, தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘நலத் திட்டங்களை அள்ளித் தரும் விடியல் அரசு எனத் தமிழ்நாடு முதலமைச்சர் கலந்துகொள்ளும் விழாக்களில் இருண்ட தி.மு.க அரசுக்கு வெற்று விளம்பரம் செய்யப்படுகிறது! ஆனால் உண்மையில் நடப்பது என்ன?

‘கருவறை முதல் கல்லறை வரைஞ்’ அலட்சியமும் ஊழலும் மலிந்து போன, நிர்வாகத் திறனற்ற ‘விளம்பர மாடல்’ ஆட்சியாகத்தான் தி.மு.க. அரசு திகழ்கிறது.

அதன் காரணமாகவே ஆண்டு முழுதும், ‘நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தஞ் அரும்பாடுபட்டு உழைக்கும் விவசாயிகள், ஒவ்வொரு வட்டத்திலும் மாவட்டத்திலும் தொடங்கி, தலைநகர் சென்னை வரையிலும் பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தித் தமிழக அரசை எதிர்த்துத் தினமும் போராடிக் கொண்டிருக்கின்றனர். அதன் ஒரு பகுதிதான், நெல் விவசாயிகள் வயிற்றில் நேரடியாக அடித்து, அவர்களின் வாழ்வைப் பறித்த நெல் கொள்முதல் ஊழலை எதிர்த்து நடைபெறும் போராட்டங்கள்.

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை ஏற்ற – இறக்க, எடைபோட்டுக் கட்ட, மூட்டைகளாகப் பிரிக்க என அனைத்து வேலைகளுக்கும் அங்கிருக்கும் ஊழியர்களுக்கு, ஒவ்வொரு கட்டமாக விவசாயிகள் லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கிறது. அதையும் கடந்து, வேறு வழியில்லாமல் லஞ்சமும் கொடுத்து, தாங்கள் விற்பனை செய்த நெல்லுக்கு உரிய பணத்தையும் கேட்டு மூன்று மாதங்களாக விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

811 கோடி ரூபாய்க்கு நெல்லைக் கொள்முதல் செய்துவிட்டு, அந்தப் பணத்தைப் பெற்றுத் தராமல் மூன்று மாதங்களுக்கும் மேலாக விவசாயி களைத் தமிழக அரசு இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது.

ஒன்றிய பா.ஜ.க. அரசை வெளியில் எதிர்ப்பது போல் கபட நாடகம் நடத்தும் தி.மு.க அரசு, அவர்கள் உருவாக்கிய தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம் (National Co-Operative Consumer’s Federation of India Private Limited) என்ற நிறுவனத்திற்கு நெல்லைக் கொள்முதல் செய்யும் அனுமதியை வழங்கியதே இத்தனை பிரச்சினைகளுக்கும் காரணம் என்பதும் தற்போது அம்பலமாகி உள்ளது.

இந்தத் தகவல் வெளியான போதே டெல்டா மாவட்ட விவசாயிகள், ‘தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம் என்ற அமைப்பு, அரசின் பொதுத்துறை நிறுவனமோஞ் கூட்டுறவு அமைப்போ அல்ல! அது தனியார் வியாபாரிகள், இடைத்தரகர்கள், லாரி ஒப்பந்தக்காரர்கள் அடங்கிய தனியார் கூட்டமைப்பு.

அவர்களிடம் லட்சக்கணக்கான மெட்ரிக் டன் நெல்லைக் கொள்முதல் செய்வதற்கான எந்த உள்கட்டமைப்புகளும் இல்லை; அப்படிப்பட்ட அமைப்புக்குத் தமிழக அரசு அனுமதி அளிப்பதால், நெல் கொள்முதல் என்பது நாளடைவில் முழுக்க முழுக்கத் தனியார்மயமாகிவிடும்;

நெல்லுக்கு உரிய ஆதார விலை கிடைக்காது; விற்பனை செய்த நெல்லுக்குரிய பணமும் கிடைக்காது என எச்சரித்துப் போராட்டங்களில் இறங்கினர். அதோடு விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் ஆற்றலைத் தமிழக அரசு நாளடைவில் இழந்துவிடும் என்றும் எச்சரித்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளைச் சமாதானப்படுத்திய தி.மு.க. அரசு, டெல்டா மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்திற்கு நெல்லைக் கொள்முதல் செய்யும் அனுமதியை வழங்கியது.

விவசாயிகள், விவசாய சங்கத்தினர் எச்சரித்ததைப் போலவே, எந்த உள்கட்டமைப்பு வசதியும் இல்லாத தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம், தமிழ்நாட்டில் தனியார் ஏஜென்டுகளை நியமித்து, விவசாயிகளிடம் இருந்து நெல்லைக் கொள்முதல் செய்தது. ஆனால், மூன்று மாதங்களுக்கு மேலாகியும், கொள்முதல் செய்த நெல்லுக்கான விலையை விவசாயிகளுக்குக் கொடுக்கவில்லை.

விவசாயிகளிடம் கொள்முதல் செய்த ஏஜென்டுகளிடம் கேட்டால், ‘எங்களுக்குப் பணம் வந்தால் உங்களுக்குத் தருகிறோம்’ என அலட்சியமாகச் சொல்கிறார்கள். இது தொடர்பாக எத்தனை விவசாயிகளிடம், எவ்வளவு நெல்லைத் தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம் கொள்முதல் செய்தது என்பதற்கான விபரங்களே தங்களிடம் இல்லை என்று துறை அதிகாரிகள் கூறியதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெருவில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கின்றனர். மோசடி தி.மு.க அரசு ‘திருடனுக்குத் தேள் கொட்டியது போல்’ திகைத்துப் போய் இருக்கிறது. இது ஒருபக்கம் என்றால், “ம் என்றால் சிறைவாசம்ஞ்” ஏன் என்றால் வனவாசம்ஞ்’ என்ற அதிகார மமதையில், அடக்குமுறைகளை ஏவி, “நாங்கள் ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளின் துயர் துடைப்போம்” என்று உறுதி கொடுத்துவிட்டு, இன்று அந்த விவசாயிகளையே கண்ணீர் விட வைத்திருக்கும் கபட நாடக ஆட்சியாகத் தி.மு.க ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது’’ இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal