தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக சட்டங்களும், நீதிகளும் நிலைநாட்டப்பட்டு வரும் நிலையிலும், ஆங்காங்கு பாலியல் தொல்லைகள் அரங்கேறி வருவதுதான் வேதனை அளிக்கிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார்கள். அதில் ஒரு மகள் காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலகம் அருகே உள்ள் அரசுப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இதே பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவர் 9ஆம் வகுப்பும், இன்னும் 2 மாணவர்கள் 8ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

இந்த சூழலில் களக்காட்டூர் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞரான அஜய் என்பவர் அந்த 3 மாணவர்களுடன் இணைந்து 11ஆம் வகுப்பு மாணவிக்கு குளிர் பானத்தில் மதுபானத்தை கொடுத்துள்ளனர். இதனை அறியாமல் அந்த மாணவி குளிர் பானத்தை குடித்துள்ளார். இதன்பின் அவரை அந்த மாணவர்களும், இளைஞர் அஜயும் சேர்ந்து களக்காட்டூர் பகுதியில் உள்ள வங்கியின் பின்புறம் அழைத்து சென்றுள்ளனர்.

வங்கிக்கு பின்புறம் அழைத்து சென்று 3 மாணவர்கள் மற்றும் 22 வயது இளைஞர் சேர்ந்து மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதில் கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட அந்த 3 மாணவர்களும் மாணவியை விடவும் சிறிய வயதுடையவர்கள். இதனைத் தொடர்ந்து காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பின்னர் மாநகர காவல்துறையினர் உடனடியாக 2 சிறுவர்கள் மற்றும் 22 வயது இளைஞரான அஜய் ஆகியோரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மற்றொரு பள்ளி மாணவனை போலீசார் தேடி வருகின்றனர். இதனிடையே 22 வயதாகும் இளைஞர் அஜய்-க்கு இந்த சம்பவத்தில் தொடர்பில்லை என்று அந்த பள்ளி மாணவி கூறியதாக தகவல் சொல்லப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ள மாணவர்கள் 18 வயதிற்கு குறைவானவர்கள். இதன் காரணமாக 3 பேர் மீதும் போக்சோ வழக்கின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பள்ளி சிறுவர்கள் இப்படியான சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal