த.வெ.க. தலைவர் விஜய்க்கு மதுரையில் ரோடு ஷோ நடத்த அனுமதி மறுத்த நிலையிலும் ஏராளமான இளைஞர்கள் குவிந்தனர். ஆனால், மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ நடத்தியும் பெரிய அளவில் கூட்டம் கூடவில்லை. இந்த நிலையில்தான் ‘மதுரையில் மாஸ் காட்டியது யார்?’ என வலைதளங்களில் த.வெ.க.வினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நடிகர் விஜய், ஜனநாயகன் படப்பிடிப்புக்காக, மதுரை விமான நிலையத்தில் இருந்து கொடைக்கானலுக்கு கடந்த மே 1ம் தேதி சென்றார். மதுரை விமான நிலையத்தில் இருந்து, திறந்தவேனில் நின்றபடி, அவர் பயணித்தார்.
அப்போது, தொண்டர்களும் மக்களும் விஜயை பார்க்க திரண்டனர். வாகனங்களிலும், மரக்கிளைகளிலும் ஏறி நின்று, விஜயை பார்த்தனர்.விஜயின், ‘ரோடு ஷோ’ வீடியோவையும், மதுரையில் கடந்த 31ல், முதல்வர் ஸ்டாலின் நடத்திய ‘ரோடு ஷோ’வையும் ஒப்பிட்டு, சமூக வலைதளங்களில் த.வெ.க.,வினர் விமர்சித்து வருகின்றனர்.
‘‘ உங்ககிட்ட பணம் இருக்கலாம்; உச்சபட்ச அதிகாரம் இருக்கலாம். அவதூறு பரப்ப ஆயிரம் ஊடகங்கள் இருக்கலாம். ஆனால், மதுரையில் விஜய்க்கு வந்த மாதிரி எதையும் எதிர்பார்க்க முடியாது. அளவு கடந்த அன்பைக் காட்டுற மக்கள் படை மட்டும் என்னைக்குமே உங்களிடம் இருக்காது…!
மதுரையில், விஜய்க்கு அன்பால் தன்னெழுச்சியாக அலை கடலென திரண்டது மக்கள் கூட்டம். முதல்வர் ஸ்டாலினுக்கு, வெளியூரில் இருந்து காசு கொடுத்து கூட்டியும் கூடாத கூட்டம். அதாவது நீங்கள் நடத்தியது ‘ரோடு ஷோ’ அல்ல, காமெடி ஷோ’’ இவ்வாறு அவர்கள் பதிவிட்டுள்ளனர்.
ஆக மொத்தத்தில் இளைஞர்களின் செல்வாக்கு யாருக்கு இருக்கிறது என்பது இதிலிருந்தே புரிய ஆரம்பித்திருக்கிறது.