‘வருகின்ற செப்டம்பர் 15ம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்தநாளுக்குள் ‘இணைப்பு’ நடந்தால் மட்டுமே அதிமுகவிற்கு வெற்றி முகம் தோன்றும். இல்லையென்றால் மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைந்துவிடும்’’ என எச்சரிக்கை மணி அடித்திருக்கிறார் ஓ.பி.எஸ். அணியில் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் ஆர்.வி.ரஞ்சித்குமார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ‘அதிமுக உரிமை மீட்பு குழு’ எனும் பெயரில் தனி அணியாக செயல்பட்டு வரும் நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளராக ஆர்.வி. ரஞ்சித் குமார் செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில், ஓ.பி.எஸ். அணியின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் ஆர்.வி.ரஞ்சித் குமார் செய்தியாளர்கள் சந்திப்பில், ‘‘வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் நிச்சயமாக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஒருங்கிணைந்த அதிமுகவாக ஒற்றுமைப்படுத்தினால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற வேண்டுகோளை வைக்கிறேன். இல்லையென்றால் எடப்பாடி பழனிச்சாமி மூன்றாவது இடத்திற்கு தான் செல்வார்கள்.

மீண்டும் 2026 இல் திமுக தற்போது ஆண்டு கொண்டிருக்கின்ற முதலமைச்சர் தான் மீண்டும் தொடருவார் என்பதுதான் இன்றைய சூழ்நிலை இருக்கிறது. ஒன்று பட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும் இல்லை என்றால் மூன்றாவது இடத்திற்கு தான் எடப்பாடி போவார்.

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கண்டெடுத்த இரட்டை இலை சின்னத்தை வேரோடு அழிப்பதற்கான வழியை எடப்பாடி அவர்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருவது தவறாக தெரிகிறது.

ஓபிஎஸ் அவர்கள் அம்மாவிடம் நல்ல பொறுப்பில் இருந்தார்கள் பொருளாளராக இருந்தார்கள், தற்போது பொதுச்செயலாளராக நீங்கள் இருக்கிறீர்கள், சாதாரண விஷயம் பேசி தீர்த்துக் கொள்ளலாம் இல்லையாஅவரை கூப்பிட்டு வைத்து பொருளாளர் பதவி வழங்குகிறேன் என்றால் வரப்போகிறார்.

நாங்கள் எல்லாம் எதிர்த்து எதற்கு வேலை செய்ய வேண்டும் தேவையில்லாமல்அதைப்போல் கூட்டணியில் சேர்க்க மாட்டேன் என்றால் கண்டிப்பாக தோல்வி உறுதி.மாற்றி மாற்றி ஒருவரை ஒருவர் தோற்கடித்துக் கொள்வார்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மூன்று தொகுதியும் வராது.அதிமுக மூன்றாவது இடத்திற்கு போகும்.

விஜய்க்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் 2026 இல் கிடையாது. 2029 இல் ஒரே நாடு ஒரே தேர்தல் வரும்பொழுது மூன்றாண்டுகளுக்குப் பிறகு மக்களுடைய நிலையை பொறுத்து.2026 இல் எடுத்தவுடன் முதலமைச்சராக கூடிய வாய்ப்பு யாருக்கும் கிடையாது புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கு மட்டும் தான் அந்த வாய்ப்பு இருந்தது.
2026ல் வாய்ப்பு கிடைப்பது குறைவு. எதிர்க்கட்சியாக வேண்டும் என்றால் வரலாம். எடப்பாடி அவர்களிடம் இதே நிலை நீடித்தால் விஜய் எதிர்க்கட்சி. ஒற்றுமை படுத்தினால் மட்டுமே அதிமுகவா? திமுகவா? என்ற போட்டி இருக்குமே தவிர ஒற்றுமை இல்லா விட்டால் எடப்பாடி நினைக்கும் அரசு அதிமுக அரசு வருவதற்கு வாய்ப்பு இல்லை உறுதியுடன் கூறுகிறேன்.

வருகின்ற செப்டம்பர் 15 பேரறிஞர் அண்ணா பிறந்தநாளுக்குள் அதிமுக இணைப்பு நடந்தால் மட்டுமே அதிமுகவிற்கு வெற்றி முகம் தோன்றும் இல்லையென்றால் அதிமுக என்பதே ஒரு கம்யூனிஸ்ட் மாதிரி சின்ன கட்சியாக மாறிவிடும். பெரிய கட்சியாக திமுகவும் விஜய் கட்சி யும் தான் தமிழ்நாட்டில் இருக்கும்.

அதற்கு வாய்ப்பளிக்காமல் எடப்பாடி அவர்கள் அதிமுகவை ஒற்றுமைப்படுத்த முயற்சி மேற்கொள்ள வேண்டும்.தற்பொழுது ஆண்டு கொண்டிருக்கும் முதலமைச்சர் ஆட்சியில் பெரிதாக தவறு ஒன்றும் கூறுவதற்கு இல்லை அவர் கொடுத்த வாக்குறுதி எல்லாம் ஓரளவிற்கு சரியாக செய்து விட்டார். கொடநாடு கொலை வழக்கு விவகாரத்தில் நான் நடவடிக்கை எடுப்பேன் என தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்து இருந்தார். அதன்படி முதலமைச்சர் கனிவு கூர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

அது மட்டும் இல்லாமல் 2016 ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஓசூர் பகுதியில் 7 கண்டைனர்களில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது அந்த பணம் எல்லாம் என்னவாயிற்று யார் எடுத்துச் சென்றார்கள் என்பதையும், முதல்வர் அவர்கள் கண்டுபிடித்து தரவேண்டும், நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும், என்பது என்னுடைய கோரிக்கையாக வைக்கிறேன்’’ அதிரடியாக பேசி முடித்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal