கோடை விடுமுறை முடிந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கமான பணிகள் இன்று முதல் தொடங்குகிறது.
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளைக்கு மே 1ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதிவரை கோடை விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில், அவசர வழக்குகளை விசாரிக்க சிறப்பு அமர்வுகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் இன்று முதல் வழக்கமான பணிகள் நடைபெறும்.