அ.தி.மு.க.வின் கொங்கு மண்டல தளபதியாக விளங்கிய எஸ்.பி.வேலுமணிக்கு ரூ.1கோடி பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தம் சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அதிமுக தலைமை நிலையச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணிக்கு கடிதம் மூலமாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதில், ஜூலை 30 ஆம் தேதி குண்டுவெடிப்பு நடத்தி எஸ்பி வேலுமணியை கொலை செய்யப் போவதாகவும், ஒரு கோடி ரூபாய் தர வேண்டும் என்றும் காளப்பட்டி பகுதியில் இருந்து கடிதம் வந்துள்ளது.

இந்த கொலை மிரட்டல் சம்பவம் தொடர்பாக கோவை புறநகர் மாவட்ட அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் தாமோதரன் தலைமையில், கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், கோவையில் வெடிகுண்டு வைத்து ஜூலை 30 ஆம் தேதிக்குள் எஸ்.பி.வேலுமணியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளோம். கருப்பு பணம் வைத்துள்ளதற்கான ஆதாரங்கள் உள்ளன.
மே 25 ஆம் தேதி குறிப்பிட்ட ஒரு இடத்தில் ஒரு கோடி ரூபாய் பணத்தை வைக்க வேண்டும் என்றும், காவல் துறைக்கு சென்றால் 3 மாதங்களில் குடும்பத்தில் உள்ள மூன்று பேரை கொல்வோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று காவல் ஆணையரிடம் அளிக்கப்பட்டுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொலை மிரட்டல் கடிதம் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.