திருச்சியில் உள்ள முத்தரையர் சிலைக்கு முன்னாள் அ.ம.மு.க.வின் மாநில நிர்வாகி துரை.செல்வமோகன் தனது ஆதரவாளர்களுடன் வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1,350-வது சதய விழாவை ஒட்டி இன்று திருச்சியில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திருச்சி ஒத்தகடையில் உள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு முன்னாள் வனத்துறை அமைச்சர் என்.செல்வராஜின் சகோதரர் மகன் துரை.செல்வமோகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மறைந்த முன்னாள் அமைச்சர் என்.செல்வராஜ் முத்தரையர் சமுதாய மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். அவருடைய வழியில் துரை செல்வமோகனும் முத்தரையர் சிலைக்கு தனது ஆதரவாளர்களுடன் வந்து மலை அணிவித்து மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால், பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களும் பெரும்பிடுக முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகிறார்கள்.