டாஸ்மாக் முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதித்துள்ள சுப்ரீம் கோர்ட், ‘‘அனைத்து வரம்புகளையும் அமலாக்கத்துறை மீறி விட்டது. கூட்டாட்சி நடைமுறையை மீறியிருக்கிறது’’ என்றும் கருத்து தெரிவித்துள்ளது.
இந்த நிலையில்தான் டாஸ்மாக் விவகாரத்தில் முறைகேடு நடந்திருப்பது உண்மை. இந்த விவகாரத்தில் தி.மு.க.விற்கு தண்டனை நிச்சயம் கிடைக்கும் என பா.ஜ.க. மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக தமிழக பா.ஜ.க. மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத், ‘‘அமலாக்கத்துறை குறித்து அமலாக்குத்துறை விசாரணை முறை குறித்து உச்ச நீதிமன்றம் சில கருத்துக்களை தெரிவித்துள்ளது. ஆனால் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெறவில்லை என்று கூறப்படவில்லை.
விசாரணை அமைப்புகளையும் நீதிமன்றங்களையும் ஏமாற்றி விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்யக் கூடியவர்கள் திமுகவினர். திமுகவின் கடந்த கால வரலாறு திமுக அமைச்சர்கள் மீது உள்ள வழக்குகள் தண்டனைகள் இதுவே இதற்கு சாட்சி. நீதிமன்றங்களையே ஏமாற்றி வந்தவர்கள் நீதிமன்றத்தால் மீண்டும் விசாரணைக்கு திமுகவின் சில இந்நாள் முன்னாள் அமைச்சர்களுடைய வழக்குகள் உட்படுத்தப்பட்டுள்ளன.
டாஸ்மார்க் நிறுவனத்தில் விஞ்ஞான ரீதியாக ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் நிச்சயம் தண்டனை பெறுவார்கள்’’ என்று கூறியிருக்கிறார்.