ஈரோடு மாவட்டம்கோபி அருகே நம்பியூர் பேரூராட்சியில் 12 கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கட்சி வேறுபாடு இன்றி அனைத்து கட்சி உறுப்பினர்களும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை வாங்கும் வரை உள்ளிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்து பேரூராட்சி செயல் அலுவலர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
திமுக கவுன்சிலர் 6 நபர்களும், காங்கிரஸில் 3 நபர்கள், அண்ணா திமுகவில் 2 நபரும், பிஜேபியில் 1 நபரும் தீவிரமாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.