தமிழக வெற்றிக் கழகத்தில் ஆதவ் அர்ஜுனா மற்றும் பிரசாந்த் கிஷோர் இடையேயான ‘பனிப்போர்’ முற்றியதில் 34 பேர் நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு ஆதரவாக சோசியல் மீடியாக்களில் (ஐ.டி.விங்) பதிவிட பிரசாந்த் கிஷோர் தலைமையிலி 60 பேர் கொண்டு குழுவினர் செயல்பட்டு வந்தனர்.

இந்த நிலையில்தான் ஆதவ் அர்ஜுனா மற்றும் பிரசாந்த் கிஷோர் இடையோயான பணிப்போர் முற்றியதில் பி.கே. குழுவைச் சேர்ந்த 34 பேரை ஆதவ் அர்ஜுனா நீக்கியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம்தான் தமிழக வெற்றிக் கழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசியல் பார்வையாளர்கள் சிலரிடம் பேசினேம். ‘‘சார் கல்யாண வீடாக இருந்தால் நான்தான் மாப்பிள்ளை… இழவு வீடாக இருந்தால்…’’ என்ற எண்ணத்தில் செயல்படுபவர்கள்தான் பிரசாந்த் கிஷோரும், ஆதவ் அர்ஜுனாவும். இவர்கள் இருவரை வைத்துக்கொண்டு விஜய் 2026 தேர்தலை சந்தித்தால் படுபாதாளத்திற்கு சென்றுவிடுவார்.

தே.மு.தி.க.வை ஆரம்பித்த விஜயகாந்த் ஒரு தொகுதியில் வென்றார். இதே நிலை நீடித்தால் விஜய் நிற்கும் தொகுதியில் கூட வெல்வாரா என்பது சந்தேகம். காரணம், தி.மு.க., அ.தி.மு.க.வில் உட்கட்சிப் பூசல் இருக்கலாம். ஆனால், இன்றும் ஒன்றிய, நகர அளவில் நிர்வாகிகளே நியமிக்காமல் ‘தலைவர்களை’ மட்டும் வைத்துக்கொண்டிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தில் வந்திருக்கும் பனிப்போர் விஜய்யை படுபாதாளத்தில் தள்ளி விடும்.

ஒரு உறையில் இரண்டு கத்திகள் இருக்க முடியாது. அதுபோல்தான் ஆதவ் ஆர்ஜுனாவும், பி.கே.வும் ஒரே டீமில் இருக்கமுடியாது. இதைவிட, விஜய்யை விட தன்னைதான் முன்னிறுத்திக்கொள்ள நினைப்பார் ஆதவ் அர்ஜுனா.

உதாரணம், வி.சி.க்கவில் இருந்தபோது, அக்கட்சியின் பொதுச்செயலாளரையே மீறி அறிக்கை வெளியிட்டவர்தான் இந்த ஆதவ் அர்ஜுனா. நடிகர் விஜய் இந்த இருவரையும் ஓரங்கட்டினால்தான், தமிழக வெற்றிக் கழகம் வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறாவிட்டாலும், குறிப்பிட்ட வாக்கு சதவீதங்களையாவது பெறும்’’ என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal