எடப்பாடியாரின்பிறந்த நாளை முன்னிட்டு அ.தி.மு.க. மருத்துவரணி சார்பில் எடப்பாடியார் நீண்ட ஆயுளுடன் பல்லாண்டு காலம் வாழவும், 2026 முதலமைச்சராக வேண்டி திருச்செந்தூர் முருகன் கோவிலில் சண்முகர் அர்ச்சனை செய்து பொதுமக்களுக்கு அன்னதானத்தினை கழக மருத்துவரணி இணைச்செயளாலர் டாக்டர் பா. சரவணன் வழங்கினார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடியாரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தமிழக முழுவதும் திருக்கோவிலில் எடப்பாடியாரின் பெயரில் சிறப்பு பூஜை செய்தும், பொது மக்களுக்கு அன்னதானமும், அதனைத் தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளும், மருத்துவ முகாம், இரத்ததான முகாம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து அ.தி.மு.க. மருத்துவரணி சார்பில் விபத்தில் கை கால் இழந்த நபர்களுக்கு செயற்கைக்கால் கைகள் வழங்கப்பட்டு வரும் வேளையில், அறுபடை வீடு முருகன் கோயிலில் எடப்பாடியார் பெயரில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு வருகிறது, இதனைத் தொடர்ந்து அறுபடை வீட்டில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் முருகன் கோவிலில், கழக மருத்துவரணி சார்பில், மிகவும் திருச்செந்தூர் முருகன் கோவிலில் விசேஷ பூஜையான சண்முகர் பூஜையை கழக மருத்துவரணி இணைச் செயலாளர் பா.சரவணன் செய்து பொதுமக்களுக்கு அன்னதானத்தை வழங்கி கூறியதாவது,

‘‘ அ.தி.மு.க. மருத்துவரணி சார்பில், எடப்பாடியாரின் பிறந்த நாளை முன்னிட்டு தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வரும் வேளையில், முருக பெருமான் அறுபடை வீடுகளில் தங்க தேர் இழுத்தும் சிறப்பு பூஜை செய்யப்பட்டு வருகிறது, தற்போது இங்கே திருச்செந்தூர் கோவிலில் மராமத்து பணி நடப்பதால் தங்கத்தேர் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது அதனால் திருச்செந்தூர் முருகனுக்கு மிகவும் விசேஷ பூஜைக்கான சண்முகர் பூஜை நடைபெற்றது.

இந்த பூஜையில் முருகப் பெருமானின் ஆறு திருவுருவத்திற்கு ஆறு புரோகிதர்களால், ஆறுவிதமான மலர்களுடன், ஆறு விதமான நைவேத்தியங்கள் வைத்து, சகஸ்ரநாம அர்ச்சனை செய்து செய்யப்பட்டது.

இந்த பூஜையில் எடப்பாடியார் பல்லாண்டு காலம் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும், 2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடியார் வெற்றி பெற்று தமிழகத்தின் முதலமைச்சராக வரவேண்டும் என்று சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. திருச்செந்தூர் என்பது மிகவும் விசேஷமான ஆலயங்களில் ஒன்று, இங்குதான தேவர்களையும், மக்களையும் துன்புறுத்திய சூரபத்மனை வதம் செய்து மக்களை காப்பாற்றினார்முருகப்பெருமான்.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக ஸ்டாலின் திமுக அரசு மக்களை வாட்டி வதைக்கும் ஒரு ஹிட்லர் அரசாக உள்ளது ,இந்த மக்கள் விரோத ஆட்சியில் இருந்து மக்களைக் காப்பாற்றி மீண்டும் முதலமைச்சராக வரவேண்டும் என ஒட்டுமொத்த தமிழகத்தின் குரலாக உள்ளது. நிச்சயம் 2026 ஆண்டில் எடப்பாடியார் மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக வருவார் ஏனென்றால் எடப்பாடியாருக்கு முருகப்பெருமானின் அருளாசி உள்ளது’’ என கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal