தமிழகம் முழுவதும் நேற்றைய தினம் (12ம் தேதி) எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

அ.தி.மு.க. சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டாலும், மதுரையில் டாக்டர் சரவணன் வழங்கிய நலத்திட்ட உதவிகள்தான் மக்களை வெகுவாக கவர்ந்ததோடு, அவர்களது கவலையையும் போக்கும் விதமாக அமைந்தது.

எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. மருத்துவ அணி மாநில இணைச்செயலாளர் திரு டாக்டர்.பா.சரவணன் (முன்னாள் எம்.எல்.ஏ.) அவர்கள் ஏற்பாட்டில், கால் இழந்த நபர்களுக்கு இலவச செயற்கை கால்கள் மற்றும் பிறவி இருதய கோளாறால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இலவச இருதய அறுவை சிகிச்சை வழங்கப்பட்டது.

மேலும், கழக நிர்வாகிகளுடன் இணைந்து கழக கொடியேற்றி, கேக் வெட்டி இனிப்புகளையும் ‘அறுசுவை விருந்து’ பொதுமக்களுக்கு வழங்கினார். கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உடனிருந்தனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal