தி.மு.க.வின் மூத்த அமைச்சர்களான பொன்முடி, கே.என்.நேரு, செந்தில் பாலாஜி ஆகியோர் மீது அ.தி.மு.க. நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வந்தது.
இந்த தீர்மானம் தன்னுடைய பரிசீலனையில் உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். நிறைய அலுவல்கள் உள்ளதால் தீர்மானத்தை இன்று எடுக்க முடியாது என சபாநாயகர் கூறியதை அடுத்து, தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.