கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகம் வந்த அமித்ஷா ‘அ.தி.மு.க. & பா.ஜ.க.’ கூட்டணியை உறுதிபடுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமித்ஷா, ‘தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கப்படும். ஆனால், அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி’ எனவும் அறிவித்தார். ஆகமொத்தத்தில் 2026ல் அ.தி.மு.க. தலை¬யில் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என்பது உறுதியானது.

இந்த நிலையில், ‘‘பாஜக உடன் கூட்டணி மட்டுமே, கூட்டணி ஆட்சி’’ என்று அமித் ஷா கூறவில்லை என, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும், பாஜக உடனான கூட்டணி என்பது திமுகவிற்கு எதிரான வாக்குகள் சிதறக்கூடாது என்பதற்கானது மட்டுமே எனவும் விளக்கமளித்துள்ளார்.

ஆக மொத்தத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் பா.ஜ.க.விற்கு பங்கில்லை என எடப்பாடி பழனிசாமி அந்தர் பல்டி அடித்திருப்பதுதான், பா.ஜ.க.வினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal