தமிழக பாஜகவின் 13-வது மாநிலத் தலைவர் ஆகிறார் நயினார் நாகேந்தரன். இது குறித்து நாளை (ஏப்.12) அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாஜக மாநில தலை​வர் தேர்​தலுக்கு விருப்​ப மனு தாக்​கல் இன்று (ஏப்.11) நடை​பெற்றது. தமிழக பாஜக​வில் மாநில தலைவர் மற்​றும் தேசிய செயற்​குழு உறுப்​பினர் பதவி​களுக்​கான தேர்​தல் அறிவிக்​கப்​பட்​டிருந்தது. அதன்​படி, இவ்​விரு பதவிகளுக்கு போட்​டி​யிடு​பவர்​கள் விருப்​ப மனு தாக்​கல் செய்​ய​லாம் என தமிழக பாஜக தேர்​தல் அதி​காரி எம்​.சக்​கர​வர்த்தி அறி​வித்​திருந்தார். இதற்கான, விருப்பமனுக்களை இன்று மதி​யம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை போட்​டி​யிட விருப்​ப​முள்​ளவர்​கள் தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பாஜக நெல்லை தொகுதி எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கு விருப்பமனு அளித்தார். அவரைத் தவிர, மாநிலத் தலைவர் பதவிக்கு வேறு யாரும் விருப்பமனு அளிக்காததால், போட்டியின்றி அப்பதவிக்கு அவர் தேர்வு செய்யப்படுவதாக கட்சியின் தேர்தல் அதிகாரி அறிவித்தார். இதையடுத்து, தமிழக பாஜகவின் 13-வது மாநிலத் தலைவர் ஆகிறார் நயினார் நாகேந்தரன். இது குறித்து நாளை (ஏப்.12) அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, சென்னை வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனியார் ஓட்டலில் செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்தார். இதற்காக, அங்கு தேசிய ஜனநாயக கூட்டணி என்று தலைப்பிடப்பட்ட பேனர் வைக்கப்பட்டிருந்தது. கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்காத நிலையில், அந்த பேனர் மாற்றப்பட்டது. பாரதிய ஜனதா கட்சி என குறிப்பிடப்பட்டிருந்த அந்த பேனரில் நயினார் நாகேந்திரனின் படம் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal