அ.தி.மு.க. கூட்டணியில் சீமானை இணைப்பதற்கான வேலைகளில் அமித் ஷா இறங்கியிருக்கிறார். தமிழகம் வரும்போது எடப்பாடியிடம் அதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடப் போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று இரவு தமிழ்நாடு வருகிறார். நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பல்வேறு தரப்பினரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து அதிமுகவின் முக்கியமான டாப் எம்எல்ஏக்கள் சிலருக்கு கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முக்கியமான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தமிழ்நாடு வருகையை முன்னிட்டு முக்கியமான உத்தரவு ஒன்றை நிர்வாகிகளுக்கு அவர் பிறப்பித்து உள்ளார். அதன்படி 5 நாட்கள் சட்டசபைக்கு விடுமுறை விடப்பட்டுள்ள போதும்.. அதனால் யாரும் வீட்டிற்கு போக வேண்டாம்.. சொந்த ஊருக்கு செல்ல வேண்டாம்.. எல்லோரும் சென்னையிலேயே இருக்குமாறு முக்கிய நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார்.

இந்த கூட்டத்தில் அதிமுக – பாஜக கூட்டணி பற்றி எடப்பாடி – அமித் ஷா இறுதி செய்வார்கள் என்று கூறப்படுகிறது. நாளையே கூட கூட்டணி பற்றிய இறுதி முடிவுகள் எடுக்கப்படலாம்.

திமுக கூட்டணியில் இந்த முறை பாஜக கிட்டத்தட்ட 100+ இடங்களை பெற திட்டமிட்டு உள்ளதாம். ஆம்.. அதாவது 100+ இடங்களை பெற்றுவிட்டு அதில் சிலவற்றை தனது கூட்டணி கட்சிகளுக்கு பிரித்து கொடுக்க முடிவு செய்துள்ளார்களாம். அதாவது அதிமுக சில இடங்களை கூட்டணி கட்சிக்கு கொடுத்தால்.. பாஜகவும் கூடுதல் இடங்களை வாங்கி அதை டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம் போன்றவர்களுக்கு பிரித்து கொடுக்கும் திட்டத்தில் இருக்கிறதாம்.

அதிமுக -& பாஜக கூட்டணி ஒரு பக்கம் உருவாகி வரும் நிலையில், இன்னொரு பக்கம் பாஜக – &அதிமுக கூட்டணியில் நாம் தமிழர் கட்சியை இழுப்பதற்கான முன்னெடுப்புகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இப்போது இந்த நிலவரப்படி பார்த்தால் தமிழக அரசியலில் மும்முனை போட்டி நிலவுகிறது. திமுக – & காங்கிரசின் இந்தியா கூட்டணி. அதிமுக &- பாஜகவின் என்டிஏ கூட்டணி. கடைசியாக தமிழக வெற்றிக் கழகம். இதில் தமிழக வெற்றிக்கழகம். திமுகவை அரசியல் எதிரி என்று கூறிவிட்டது. பாஜகவை கொள்கை எதிரி என்று கூறிவிட்டது. இதனால் அவர்கள் இருவருடனும் திமுக சேரவே வாய்ப்பு இல்லை.

எனவே தமிழக வெற்றிக் கழகம் 3வது அணியாக உருவெடுத்து இருப்பது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. அப்படி இருக்க மிச்சம் இருப்பது நாம் தமிழர்தான். நாம் தமிழர் இதில் கேம் சேஞ்சர் ஆக முடியும். ஏனென்றால் அவர்களிடம் 8- முதல் 10 சதவிகிதம் வாக்குகள் உள்ளன. நாம் தமிழர் தனியாக நின்றால் 4 முனை போட்டி உருவாகி வாக்குகள் பிரியும். எதிரணி வாக்குகள் பிரிந்தால் அது திமுகவிற்கு சாதகம். அதிமுக -& பாஜக கூட்டணிக்கு சென்றால். அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்க கூட சாதகமான சூழல் ஏற்படும். இதனால், சீமான் குறித்தும் எடப்பாடியிடம் அமித் ஷா பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

‘‘தமிழின் பெருமையை பிரதமர் மோடி உயர்த்தி பிடிக்கிறார்’’ என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் பேசியிருப்பது குறிப்பிடத் தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal