தி.மு.க., அரசில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. அண்மையில் விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், இவர் பெண்கள் குறித்தும், சைவம், வைணவத்தை அவமதிக்கும் வகையில் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அவர் அந்த வீடியோவில், பெண்கள் குறித்து ஆபாசமாக பேசியதற்கு கண்டனம் வலுத்து வருகிறது. அமைச்சரின் ஆபாச பேச்சு பெண்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. அமைச்சர் பொன்முடியின் பேச்சிற்கு, தி.மு.க., எம்.பி., கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘அமைச்சர் பொன்முடியின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப் பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது’’ என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே சீனியரான அமைச்சர் பொன்முடி தி.மு.க. துணைப் பொதுச் செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவருடைய பதவியை தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் பொன்முடியின் துணைப் பொதுச் செயலாளர் பதவியை பறித்திருக்கிறார்.

தி.மு.க.வை பொறுத்தவரை கட்சியில் நீக்கம் தொடர்பான அறிவிப்பில் துரைமுருகன்தான் கையெழுத்திட்டு அறிவிப்பை வெளியிடுவார். ஆனால், பொன்முடியின் நீக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலினே கையெழுத்திட்டு நீக்கியிருக்கிறார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal