‘‘கச்சத்தீவு விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறது தி.மு.க.! மத்தியில் அதிகாரமிக்க பதவியில் இருந்த பொழுது ஒரு துரும்பை கூட போடவில்லை’’ என அ.தி.மு.க. மருத்துவரணி இணை செயளாலர் டாக்டர் பா.சரவணன் கடுமையாக குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

இது தொடர்பாக அ.தி.மு.க. மருத்துவரணி இணை செயளாலர் டாக்டர் பா.சரவணன், ‘‘தற்போது திமுக ஆட்சியின் மீது மக்கள் கடுங்கோபத்தில் உள்ளனர், இதை திசை திருப்ப பல்வேறு மும்மொழிக் கொள்கை, தொகுதி சீரமைப்பு, தற்போது கச்ச தீவு என்ற பிரச்சினையை கையெடுத்துள்ளனர். 2021 தேர்தல் அறிக்கையில் கச்ச தீவை மீட்போம் என்று திமுக கூறியிருந்தது இந்த நான்காண்டுகளில் இது குறித்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தார்களா?
1974 வரை கச்ச தீவு தமிழ்நாடு கட்டுப்பாட்டில் இருந்தது,தமிழக கடற்கரையில் இருந்து 12 கிலோ மீட்டர் தூரத்தில் தான் கச்ச தீவு இருக்கிறது, இதன் பரப்பளவு 285 ஏக்கர் ஆகும். ராமநாதபுரம் சேதுபதி மன்னரின் ஆளுகைக்கு கட்டுப்பட்ட பகுதியாக தான் இருந்தது ,இந்த கச்ச தீவில்1905 ஆம் ஆண்டு திருவாடனை அருகே உள்ள நம்புத்தாழை கிராமத்தைச் சேர்ந்த சீனி குப்பன் என்பவர் அந்தோணி கோவிலை கட்டினார், கச்சத்தீவு தமிழகத்தைச் சேர்ந்து தான் என்று இது போன்ற வரலாற்று உள்ளது
தமிழகத்தின் உட்பட்ட இந்த கச்ச தீவு 28.6.1974ஆம் ஆண்டு இலங்கைக்கு தாரை வார்க்க கையெழத்திடப்பட்ட போது அப்போது தமிழகத்தின் முதலமைச்சராக கருணாநிதியும்,பிரதமராக இந்திரா காந்தி இருந்தனர், சர்க்காரியா ஊழலில் இருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள இதற்கு மறைமுகமாக ஆதரவு கொடுத்தவர் கருணாநிதி என்று பல்வேறு அரசியல் கட்சிகள் அன்றைக்கு குற்றம் சாட்டினர்.
இதனைத் தொடர்ந்து 1991 ஆம் ஆண்டு புரட்சித்தலைவி அம்மா முதலமைச்சராக இருந்த பொழுது கச்ச தீவை மீட்க இதற்காக தனி தீர்மானத்தை நிறைவேற்றினார், அதனைத் தொடர்ந்த 2011,2013, 2016 ஆகிய அம்மா ஆட்சிக்காலத்திலும், அதனை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு எடப்பாடியார் ஆட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, அதனை தொடர்ந்து நேரடியாகவும் எடப்பாடியார் பாரதப்பிரதரிடத்தில் கச்ச தீவை மீட்க வலியுறுத்தினார்.
மேலும் 2008 ஆம் ஆண்டில் கச்ச தீவை மீட்க புரட்சித்தலைவி அம்மா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்,அதில் கூட 1960 ஆம் ஆண்டு மத்திய அரசு பெருவாரிப்பள்ளம் என்ற ஒரு பகுதியை கிழக்கு பாகிஸ்தானுக்கு தாரை வார்த்தது இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அந்த தீர்ப்பில் மத்திய அரசு தாரை வார்த்தது செல்லாது என்று அறிவித்தது அந்த வழக்கை பின்பற்றி வழக்கு தொடுத்தார்,அதனை தொடர்ந்து 2011 ஆம் ஆண்டில் இந்த வழக்கில் தமிழகத்தின் வருவாய் துறை இணைத்தார். அதே 2011 ஆம் ஆண்டு மத்தியில் திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி இருந்த பொழுது வெளியூறவு துறை துணைச் செயலாளர் கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்று சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்திருந்தார் அப்போது திமுக சார்பில் வாய் திறக்கவில்லை.
இன்றைக்கு கச்ச தீவு பிரச்சினையை திமுக எழுப்புகிறது இதே 16 ஆண்டுகள் வி.பி.சிங்,ஐ.கே.குஜரால், தேவகவுடா, மன்மோகன் சிங் வாஜ்பாய் ஆகியோர் பிரதமராக இருந்த பொழுது மத்திய அரசில் திமுக அங்க வகித்தபோது இது குறித்து ஏன் குரல் எழுப்பவில்லை, அன்றைக்கு சேது சமுத்திரத் திட்டம் என்ற திட்டம் பெருமையாக பேசிய திமுக அப்போதைய கச்சி தீவு பற்றி வாய் திறக்கவில்லை?
கடந்த 2019 முதல் 2024 வரை 38 நாடாளுமன்ற உறுப்பினர்களை கையில் வைத்தருந்த திமுக இது குறித்து என்ன குரல் எழுப்பினார்கள்? கடந்த நான்கு ஆண்டுகளில் சட்டமன்றத்தில் இதுகுறித்து என்ன தீர்மானம் நிறைவேற்றினார்களா? எதையும் செய்யவில்லை ஆனால் இன்றைக்கு டாஸ்மார்க் பிரச்சனையிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும், திமுக மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர் இதை திசை திருப்ப திமுக கையில் எடுத்திருக்கும் நாடகம் தான் இது கச்ச தீவை தாரை வார்த்தது திமுக காங்கிரஸ் தான் என்ற மனநிலை மக்கள் இருந்து வருகிறது எத்தனை ஸ்டாலின் எத்தனை குட்டிக்கரணம் அடித்தாலும் மக்கள் மனதில் இருந்து அதை மாற்ற முடியாது’’ என கூறினார்.
ஆக மொத்தத்தில் கச்சத் தீவு விவகாரத்தில் தி.மு.க.வின் இரட்டை வேடத்தை தோலுரித்துக் காட்டியிருக்கிறார் டாக்டர் சரவணன்!