‘‘ ஜெயலலிதாவுக்கு எதிராக குரல் கொடுக்க என்ன காரணம்?’’ என்பது குறித்து 30 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் மனம் திறந்து பேசி உள்ளார்.

எம்.ஜி.ஆர்., கழகம் என்ற கட்சியின் நிறுவனரும், அ.தி.மு.க., மாஜி அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பனின் நினைவு நாள் இன்று. அதையொட்டி அவரது சத்யா மூவிஸ் நிறுவனம், ஆர்.எம். வீரப்பன் பற்றிய நினைவுகளை குறிப்பிடும் வகையில் நடிகர் ரஜினிகாந்த் அவரை பற்றி பேசும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில் ரஜினிகாந்த் கூறி இருப்பதாவது; ‘‘அனைவருக்கும் வணக்கம். ஆர்.எம்.வீரப்பன் குறித்து பேசுவது ரொம்ப மகிழ்ச்சி.

பாட்ஷா பட வெற்றி விழாவில் அப்போதைய அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் முன்னிலையில், வெடிகுண்டு கலாசாரம் குறித்து நான் பேசியதால் அவருடைய அமைச்சர் பதவியை பறித்தார் ஜெயலலிதா. என்னால்தான் அவருக்கு பதவி போனது என்ற வருத்தம் எனக்கு இருந்தது. இதுதான் நான் ஜெயலலிதாவுக்கு எதிராக பேச இந்த காரணம்தான் முக்கியமானது’’ இவ்வாறு ரஜினி கூறியுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal