அமைச்சர் கே.என். நேருவின் மகன் மற்றும் சகோதரருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமைச்சர் கே.என். நேருவின் மகன் மற்றும் சகோதரருக்குச் சொந்தமான 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் கே.என். ரவிச்சந்திரனுக்குச் சொந்தமான ‘TVH Group’ கட்டுமான நிறுவனத்தில் பணப் பரிவர்த்தனையில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் TVH Group கட்டுமான நிறுவன அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும் சென்னையில் அடையாறு, தேனாம்பேட்டை, சிஐடி காலனி, எம்ஆர்சி நகர் உள்ளிட்ட ஐந்து இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. கே.என்.நேருவின் மகனும், எம்.பி.யுமான அருண் நேருவுக்குச் சொந்தமான ஆழ்வார்பேட்டையில் உள்ளGSNR Rice Industrial Pvt limited என்ற நிறுவனத்தில் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புடன் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
தவிர, அமலாக்கத்துறை ரெய்டின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து மேலும் சோதனை நடக்கலாம்… அல்லது அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடக்கவும் வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியிருக்கிறது.