இந்திய அளவில் விளையாட்டுத்துறையில் தமிழ்நாடு நாளுக்கு நாள் சாதனை படைத்து வருகிறது. காரணம், இளைஞர் நலன் விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி பொறுப்பேற்றதிலிருந்து விளையாட்டுத்துறைக்கு முக்கியத்தும் கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில்தான், ஆலடி அருணா லிபரல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் கோடைகால விளையாட்டு சிறப்பு பயிற்சி மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்த இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகியிருக்கிறது.

இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா தனது வலைதளப் பக்கத்தில், ‘‘ அனைவருக்கும் வணக்கம்… மூன்றாவது வருடமாக ஆலடி அருணா ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் கபடி, வாலிபால், கிரிக்கெட் இலவச விளையாட்டு பயிற்சி முகாமை ஆலடி அருணா லிபரல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் நடைபெற இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த இலவச விளையாட்டு பயிற்சி முகாம் ஏப்ரல் 21ம் தேதி முதல் மே 2ம் தேதி வரை நடக்கிறது. இந்த முகாமில் 13 வயதிலிருந்து 18 வயது மாணவிகளும் கலந்துகொள்ளலாம். திறமையான பயிற்சியாளர்கள் உங்களுக்கு விளையாட்டு பயிற்சிகளை வழங்க இருக்கிறார்கள். காலை 6 மணிக்கு தொடங்கி 9 மணிக்கு முடிந்துவிடும். விளையாட்டுப் பயிற்சி முடிந்தவுடன் காலை உணவு வழங்கப்படும்.

ஆலங்குளத்தில் இருந்து ஆலடி அருணா லிபரல் கல்லூரி வருவதற்கு இலவச பேருந்து வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் முன்பெல்லாம் விளையாட்டு பொழுது போக்காக பார்த்தோம். இன்றைக்கு பெற்றோர்களே தங்களது குழந்தைகள் அவர்களுக்கு பிடித்தமான விளையாட்டுகளில் சேர்த்து அதில் சாதனை படைப்பதற்கு முயற்சி எடுத்து வருகிறார்கள்.

ஏனென்றால், இன்றைக்கு விளையாட்டுத்துறை நல்ல ஒரு வேலைவாய்ப்பையும் உருவாக்கும் துறையாக, வாழ்வாதாரத்தை உருவாக்கும் துறையாக மாறி வருகிறது. விளையாட்டுத் துறையில் சாதித்தவர்களுக்கு அரசுப் பணி, வங்கிப் பணி என ஏராளமான மத்திய, மாநில அரசுப் பணிகள் கிடைக்கிறது. எனவே, மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழகத்தின் துணை முதல்வரும், இளைஞர் நலன் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, விளையாட்டுத்துறைக்கென நிதியை வாரி வழங்கி வருகிறார். எனவே, விளையாட்டு வீரர்கள் அனைத்தையும் பயன்படுத்திக்கொண்டு முன்னேறவேண்டும்.

சமுதாயத்தை வளப்படுத்துவோம்… உங்கள் வாழ்க்கையை மேம்படுத்துவோம்… என்றென்றும் உங்கள் பூங்கோதை ஆலடி அருணா’’ என்று அதில் பதிவிட்டிருக்கிறார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் பூங்கோதை ஆலடி அருணா அவர்கள் பெற்றி பெற்றிருக்கவேண்டியது. ஆனால், உட்கட்சியில் நடந்த உள்குத்துக்களால் தோற்கடிக்கப்பட்டார். அப்படி தோல்வியடைந்த நிலையிலும் மனம் தளராமல், தனது மக்கள் பணிகளில் கவனம் செலுத்தி வருவதுதான் உ.பி.க்களைத் தாண்டி, அனைவரது மனதிலும் இடம் பிடித்திருக்கிறார் பூங்கோதை ஆலடி அருணா!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal