தர்பூசணியில் ராசயனம் கலந்திருப்பதால், அதனை சாப்பிட்டால் உடலுக்கு கெடுதல் என உனவுத்துறை அதிகாரி பேட்டிகொடுத்தபின் தர்பூசணியை வாங்கி சாப்பிட பொதுமக்கள் தயக்கம் காட்டினர். இந்த நிலையில்தான் கோடைகாலங்களில் தர்பூசணி மனித உடலுக்கு மிகவும் நல்லது என அ.தி.மு.க. மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் பேட்டி கொடுத்துள்ளார்.
அ.தி.மு.க. மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் பேட்டியளித்த நிலையில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தர்பூசணி பழங்களின் விற்பனை களை கட்டி உள்ளது. வெயில் கடுமை காரணமாக, பலரும் தர்பூசணியை வாங்கி சென்று சாப்பிட ஆரம்பித்தனர். வியாபாரமும் களைகட்டியதாக வணிகர்கள் தெரிவித்து இருந்தனர்.
அதேநேரத்தில் தர்பூசணி விற்கப்படும் கடைகளில் சோதனை நடத்திய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அவற்றில் ரசாயனம் கலக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்ததால் அகற்றியதாக கூறினர். ரசாயனம் கலக்கப்பட்ட தர்பூசணி, நிறமேற்றி விற்பனைக்கு வைக்கப்பட்ட தர்பூசணி என மத்தியில் தகவல்கள் பரவியதால் அதை வாங்க மக்கள் தயக்கம் காட்டினர்.
இந்த நிலையில்தான், அ.தி.மு.க. மருத்துரணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன், ‘‘கோடை காலங்களில் கொளுத்தி எடுக்கும் வெயிலுக்கு தர்பூசணி சாப்பிட்டால் மிகவும் நல்லது’’ என கூறியவர் தர்பூசணி கடையில் தர்பூசணி வாங்கி சாப்பிட்டபடியே பத்திரிகையாளர்களிடம் பேசியவர், ‘‘பத்திரிகையாளர்களுக்கு வணக்கம்… இன்றைக்கு தமிழ்நாட்டில் ஒரு பிரச்னை ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது வெயில் காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறைய வாய்ப்பிருக்கிறது. எனவே, தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும் என மருத்துவர்களாகிய நாங்கள் சொல்லி வருகிறோம்.
இயற்கையாக கிடைக்கக்கூடிய பழ வகைகள்தான். முக்கியமாக தர்பூசணி சாப்பிடலாம். தவிர அனைத்து பழவகைகளுமே உடலுக்கு நல்லது. இந்நேரங்களில் ‘ஹீட் ட்ரோக், லிவர் பாதிப்பு, கிட்னி பிரச்னை’ உள்பட பல்வேறு பிரச்னைகள் உருவாகும். எனவே, நீங்கள் தர்பூசணி போன்ற பழ வகைகளை அதிகம் சாப்பிடவேண்டும்.
இந்த நிலையில்தான் சென்னையைச் சேர்ந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஒருவர், ‘நாங்கள் சோதனைக்கு சென்றிருந்தோம். அங்கு ஊசி மூலம் சாயம் ஏற்றப்பட்ட தற்பூசணி விற்பணைக்கு வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தோம்’ என்று கூறியவர், தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியும் கொடுத்தார். இது தர்பூசணி சாப்பிடும் மக்களை பெரிதும் அச்சத்திற்குள்ளாக்கிவிட்டது.
ஒரு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரியே மனித உடலுக்கு நீர்ச்சத்தை கொடுக்கக்கூடிய தர்பூசணி மீது குற்றச்சாட்டை நேரடியாக வைத்தநிலையில், ஒரு டன் தர்பூசணி விலை 13 ஆயிரம் முதல் 14 ஆயிரம் வரை விற்றுவந்த நிலையில், தற்போது 3 ஆயிரம் ரூபாய்க்கு சரிந்துவிட்டது. இதனால் விவசாயிகள் முதற்கொண்டு சாலையோர வியாபாரிகள் முதற்கொண்டு அனைவரும் பாதிக்கப்பட்டுவிட்டனர்’’ என்று காரசாரமாக பேசினார்.
வியாபாரிகள் தரப்பிலும் கடும் எதிர்ப்பும் எழுந்தது. பின்னர் இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார் விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில், அதிகாரி சதீஷ்குமார் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் தமிழ்நாடு மருந்து நிர்வாகத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி போஸ், கூடுதலாக சென்னை மாவட்ட பொறுப்புகளை கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தவிர, ‘அனைத்துப் பழங்களிலும் சாயம் ஏற்றியிருக்கமாட்டார்கள்… எனவே பொதுமக்கள் பயமின்றி தர்பூசணி பழங்களை சாப்பிடலாம். எனவே, அ.தி.மு.க. சார்பில் விவசாயிகள், மற்றும் வியாபாரிகள் நலன் சார்ந்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இருக்கிறோம்’’ என்றார் டாக்டர் சரவணன்.
‘தர்பூசணி அரசியலுக்கு’ அ.தி.மு.க. மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.