‘‘திராவிட முன்னேற்றக் கழகத்தின் நீட் நாடகம் முடிவுக்கு வந்துவிட்டது’’ என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்

சென்னை தலைமைச் செயலகத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் செய்தியாளர் சந்தித்தார். அப்போது பேசிய அவர் ;

‘‘இன்று சட்டப் பேரவையில் முதலமைச்சர் நீட் தேர்வு தொடர்பாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பை திராவிட நாடக அரசு என்பதற்கு ஒரு உதாரணமாக நாங்கள் பார்க்கிறோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம். உதயநிதி ஸ்டாலின் நீட் தேர்வு ரத்து செய்வதற்கு எங்களிடம் ரகசியம் இருக்கிறது என்றெல்லாம் சொல்லி தமிழக மக்களை திராவிட முன்னேற்றக் கழகம் ஏமாற்றி இருக்கிறது.

தமிழகத்தில் அரசியல் வாய்ப்புகளுக்காக நீட் தேர்வினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் வாழ்க்கையை கெடுத்துவிட்டு அவர்களுடைய பெயர்களில் அரசியல் செய்து இருக்கிறார்கள். முதலமைச்சர் சட்ட மசோதாவில் குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் இருந்து எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை என்று சொல்லிவிட்டு அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர் கூட்டத்தை நடத்துவோம் என்று சொல்லி இருக்கிறார்.

நீட் தேர்விற்கு எதிராக மிகப்பெரிய ஏமாற்று அரசியலை திமுக மேற்கொண்டு இருக்கிறது இது ஒரு சிறந்த உதாரணம். கூட்டாட்சி தத்துவத்தில் என்னென்ன துறைகளில் எல்லாம் மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருக்கின்றது அதைப்பற்றி தெளிவாக தெரிந்து இருந்தால் கூட மக்களை திசை திருப்பும் நோக்கத்தோடு நாங்கள் அரசியல் அதிகாரத்திற்கு வர வேண்டும் என மாணவர்கள் உயிருடன் விளையாடிக் கொண்டு முதலமைச்சர் நீட் தேர்வு நாடகத்தை முடிவுக்கு கொண்டு வந்தது இருக்கிறார்.

முழுவதுமாக நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மக்களை ஏமாற்றியதற்கு தமிழக மாணவ செல்வங்களை திசை திருப்பியதற்க்கு திராவிட முன்னேற்ற கழகங்களுடைய முதலமைச்சர் உட்பட அத்தனை பேரும் தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்கின்ற அரசியல் முழுக்கத்தோடு இத்தனை வருட அரசியல் அதிகாரத்தில் இருந்த இவர்கள் வெட்கப்பட வேண்டும். பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநில முதலமைச்சராக இந்த அறிவிப்பை மக்களை ஏமாற்றுகின்ற அறிவிப்பாக பார்க்கின்றோம்.

தமிழகத்தினுடைய கிராமப்புற அரசு மாணவர்கள் அவர்களுடைய உரிமை பாதுகாப்பு வேண்டுமென்று கடந்த ஆட்சி 7.5% இட ஒதுக்கீடு கொண்டு வந்தனர்.

கிராமப்புற மாணவர்களின் நலனை பாதுகாக்கின்ற விஷயங்களை அதிமுக செய்தது. ஆனால் அவர்களுடைய கல்வி உபகரணம் உள்ளிட்ட மற்ற செலவுகளில் போதிய உதவிகள் தற்போது வரை செய்யப்படவில்லை.

கடந்த வாரம் பத்திரிகையாளர் சவுக்கு சங்கரின் வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டது. ஒரு நகரில் ஒரு பிரபலமான யூடியூப் பத்திரிகையாளர் அவருடைய வீட்டில் வயதான தாய் முன்பாக அவரை அச்சுறுத்தும் வகையில் அவரை வீட்டில் சாக்கடை கொட்டி மனிதக் கழிவுகளை கொட்டி நடந்து இருக்கின்ற சம்பந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்காமல் அரசு இருந்திருக்கின்றது’’ என கூறினார்

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal