‘ஓ.பி.எஸ்., டி.டி.வி., சசிகலா ஆகியோரை அ.தி.மு.க.வில் சேர்க்க வாய்ப்பில்லை’ என மீண்டும் திட்டவட்டமாக கூறியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி!
தமிழ்நாட்டில் அதிமுக-பாஜக கூட்டணி அமையுமா என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்துவிட்டு, நேற்று சென்னை திரும்பினார். இந்த நிலையில், இன்று அண்ணாமலை டெல்லி சென்றிருப்பது, தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில்தான், “அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற ஓபிஎஸ் உள்ளிட்டோரை மீண்டும் சேர்க்க வாய்ப்பில்லை’‘ என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ‘‘அதிமுகவில் இருக்க ஓபிஎஸ் உள்ளிட்டோருக்கு தகுதி இல்லை’’ என்றும் அவர் தெரிவித்தார்.