‘‘புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் வழியில் புரட்சித்தமிழர் எடப்பாடியார் சிறுபான்மை இன மக்களுக்கு காவல் அரணாக உள்ளார். கருணாநிதி வழியில் ஸ்டாலின் சிறுபான்மையின மக்களை ஓட்டுக்காக மட்டும் பயன்படுத்திக் கொள்வார்’’ அதிமுக மருத்துவரணி இணை செயலாளர் டாக்டர் சரவணன் பேசியிருக்கிறார்.

மதுரையில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் இப்தார் நோன்பு உட்பட பல்வேறு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் அதிமுக மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் பேசியதாவது:

‘‘புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா, புரட்சித்தமிழர் எடப்பாடியார் ஆகியோர் சிறுபானயின மக்களுக்கு காவல் அரணாக உள்ளார்.உலமாக்களுக்கு முதன்முதலில் பென்ஷன் திட்டத்தை புரட்சி தலைவர் கொண்டு வந்தார், அந்த பென்ஷன் திட்டத்தை 1500 ரூபாயாக அம்மா உயர்த்தி தந்தார், அதனை தொடர்ந்து எடப்பாடியார் 3000 ரூபாயாக உயர்த்தி தந்தார்.

புரட்சித்தலைவி அம்மா உலமாக்களுக்கு விலையில்லா சைக்கிளை வழங்கினார்,அதனை தொடர்ந்து எடப்பாடியார் உலமாகளுக்கு இருசக்கரம் வாகனம் வழங்க 50 சகவீதம் மானியத்தை வழங்கினர்.அதேபோன்று முதன் முதலில் புனித ரமலான் நோன்புக்கு நோன்பு கஞ்சி தயாரிக்க 5,400 டன் அரிசி அம்மா அரசு வழங்கியது, இதன் மூலம் 3000 மேற்பட்ட பள்ளிவாசல் பயன் பெற்றது.

மேலும் 1500 கோடி ரூபாய் மதிப்புள்ள வக்பு வாரிய சொத்துக்களை மீட்டு தந்தது அம்மாவின் அரசாகும், அதே போன்று நாகூர் தர்காவிற்கு சந்தனக்கூடு திருவிழா நடத்த விலையில்லா சந்தன கட்டைகளை வழங்கியது அம்மாவின் அரசாங்கும்.

2019 ஆம் ஆண்டு ஹஜ் யாத்திரை மேற்கொள்ள மத்திய அரசு நிதியை நிறுத்திய போது தமிழக அரசின் சார்பில் 8 கோடி ரூபாய் நிதியை எடப்பாடியார் வழங்கினார்.அதன் பிறகு 2021 ஆம் ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள நிதி பற்றாக்குறை உள்ளது என இஸ்லாம் மக்களின் கோரிக்கையை ஏற்ற எடப்பாடியார் அதை 12 கோடியாக உயர்த்தினார் அதன் மூலம் 8,166 முஸ்லிம் இன மக்கள் பயன்பெற்றனர்.

அதேபோல ஹாஜ் யாத்திரை செல்லும் பயணிகள் சென்னையில் தங்கி செல்லும் வகையில் தங்கும் விடுதி கட்ட 15 கோடியை எடப்பாடியார் ஒதுக்கினார். அதேபோல ஹாஜியாருக்கு மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்க நிதி ஒதுக்கி தந்தவர் எடப்பாடியார். 2018 ஆம் ஆண்டு கஜா புயலில் நாகூர் தர்கா குளம் சேதமடைந்தது இந்த குளத்தை சீரமைக்க 4.2 கோடி ஒதுக்கியவர் எடப்பாடியார். அதேபோன்று சிறுபான்மை இன மக்களின் உயர்வுக்காக பொருளாதார மேம்பாட்டு கழகத்தை அமைத்து தரப்பட்டது.

அதேபோன்று தமிழக பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக முதன் முதலில் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த யாஸ்மின் அகமத் என்ற பெண்மணியை நியமித்தது அம்மாவின் அரசாகும் அதே போன்று காயிதே மில்லத் மணிமண்டபத்தை அமைதி தந்தது அம்மாவின் அரசாகும். அதேபோன்று மூணு கோடி மதிப்பில் தர்காக்கள் மற்றும் பள்ளிவாசல் சீரமைக்கப்பட்டது, அதேபோன்று வக்பு மானிய தொகை உயர்த்தி வழங்கப்பட்டது இதுபோன்று சொல்லிக்கொண்டே போகலாம்.

அது மட்டுமில்ல 2002 ஆம் ஆண்டில் அப்துல் கலாம் ஜனாதியாக தேர்தலில் நின்ற போது வாக்களித்தது அம்மாவின் அரசாகும், அதே போன்று மீண்டும் அப்துல் கலாம் ஜனாதிபதி வேட்பாளராக நின்ற போது அம்மா அதற்கு ஆதரவு தெரிவித்தார் ஆனால் கருணாநிதியோ கலாம் என்றால் கலகம் என்று விமர்சித்தார்.

அதேபோல் இன்றைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த தமிழ் மகன் உசேனை, கழக அவை தலைவராக எடப்பாடியார் நியமித்துள்ளார், இதேபோன்று திமுகவில் உயர் பொறுப்பில் சிறுபான்மை இன மக்களை ஸ்டாலின் நியமித்தது உண்டா? ஒவ்வொரு ஆண்டும் இப்தார் நோன்பு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் நடைபெற்று வருகிறது. புரட்சித்தலைவர் ,புரட்சித்தலைவி அம்மா, புரட்சி தமிழர் எடப்பாடியார் ஆகியோர் சிறுபான்மையின மக்களுக்கு செய்த சாதனை பட்டியல்களை சொல்லிக் கொண்டே போகலாம், இதுபோன்று ஸ்டாலின் சொல்ல முடியுமா?

சிறுபான்மை இன மக்களை ஓட்டு வங்கியாகத்தான் கருணாநிதி பார்த்தார் அதனை தொடர்ந்து தற்போது ஸ்டாலின் பார்க்கிறார் சிறுபான்மை மக்கள் நீங்கள் விழிக்கும் நேரம் வந்துவிட்டது, கடந்த சட்டமன்ற தேர்தலில் போது இஸ்லாமிய மக்களுக்காக பல்வேறு தேர்தல் வாக்குறுதியை ஸ்டாலின் கொடுத்தார் அதை எதை செய்தாரா? எதையும் செய்யவில்லை 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு சரியான பாடத்தை புகட்டி, எடப்பாடியாரை முதலமைச்சராக ஆக்குவதற்கு உங்கள் ஆதரவை நல்கிட வேண்டும்’’ என பேசினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal