தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி தொடர்பாக மாநிலங்களவையில் திமுக எம்.பி. வில்சன் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்தார்.
தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி ரூ.2152 கோடியை ஒன்றிய அரசு தர மறுப்பது குறித்து விவாதம் நடத்த வேண்டும். ஒன்றிய அரசு, நிதியை தவறாக பயன்படுத்துகிறது.
மாநிலங்களவை அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு விவாதம் நடத்த வேண்டும். ஒன்றிய அரசின் நடவடிக்கை கூட்டாட்சி தத்துவத்தை மீறுவதாக உள்ளது என்று கூறினார்.