வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் களத்தில் விஜய் தனித்துப் போட்டியிடுவதாக பிரசாந்த் கிஷோர் அறிவித்தார். மேலும் பிரசாந்த் கிஷோர் கூறும்போது, ‘‘தமிழகத்தில் விஜய்க்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். ஊழல், மதவாதம், வாரிசு அரசியல் ஆகியவைதான் தமிழகத்தில் பெரிய அரசியல் அரசியல் சவால்கள். ல்கள். தேர்தலில் போட்டியிட அதிக பணம் தேவைப்படுகிறது.

தற்போது தமிழகத்தில் மதவாதம் தலைதூக்கத் தொடங்கியுள்ளது. இதற்கு பாஜகதான் காரணம், அவர்களுக்கு தமிழகத்தில் இரட்டை இலக்க வாக்கு சதவீதம் உள்ளது. தமிழக அரசியலில் வாரிசு அரசியல் அதிகமாக உள்ளது. அதேநேரத்தில், முதல்வர் ஸ்டாலினுக்கு நீண்ட அரசியல் பயணம் உண்டு. அவரை வாரிசு அரசியல்வாதியாக கருத முடியாது. ஆனால், உதயநிதியை அப்படிப் பார்க்க முடியாது. அவர் விரைவாக துணை முதல்வராக மாறிவிட்டார். எனவே, வாரிசு அரசியலை எதிர்த்துப் போராட வேண்டும்.

விஜய் ரசிகர்களின் பலத்தை வாக்குகளாக மாற்ற, கட்டமைப்புப் பணியில் ஈடுபட வேண்டும். நவீனத் தொழில்நுட்ப உலகில், இந்தப் பணியை குறுகிய காலத்தில் சாதிக்க முடியும். தமிழக மக்கள் அவரை அரசியல் மாற்றத்துக்கான நட்சத்திரமாகப் பார்க்கிறார்கள்.

மேலும், சிறந்த அரசியல் தலைவராகவும் அவரை மதிப்பிடத் தொடங்கியுள்ளனர். அவரது பேச்சைக் கேட்கத் தொடங்கியுள்ளனர். அவர் தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்வதுடன், மக்களை நேரில் சந்திக்க வேண்டும். நிச் சயம் அவற்றை மேற்கொள்வார். இன்னும் ஒரு மாதத்தில் தீவிர அரசியல் களப் பயணத்தில் ஈடுபடுவார்.

தமிழக மக்கள் தேடும் நேர் மையான அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் தகுதி விஜய்க்கு உண்டு. 2026 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு பெரிய ஆச்சரி யத்தை தரும். விஜய் மிகப் பெரிய சக்தியாக உருவெடுப்பார். அவர் தனித்துப் போட்டியிடவே விரும்புகிறார். நிச்சயம் கூட்டணி கிடையாது.

திமுகவுக்கு எதிரான வாக குகளை இணைக்க அதி அதிமுக முயற்சிக்கும், ஆனால், தவெக உறுதியாக தனித்தே போட்டியிடும். தனித்து நிற்பதுதான் எங்களின் நிலைப்பாடு’’ இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் விஜய் தனித்துப் போட்டி என அறிவித்திருப்பது பற்றி தமிழக அரசியல் பார்வையாளர்களிடம் பேசினோம். ‘‘சார், விஜய்க்கு அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து போட்டியிட முதலில் விருப்பப்பட்டதார். ஆனால், தமிழகத்தின் முன்னணி பத்திரிகை மூலம் அந்த கூட்டணியை ‘பாசிசம்’ முளையிலேயே கிள்ளி எறிய முயற்சித்தது. அதன் பிறகு எடப்பாடி தரப்பிடம் பேசிய ஆதவ் அர்ஜுனா, ‘முதல் இரண்டரை ஆண்டுகள் த.வெ.க. ஆட்சி, அடுத்து அ.தி.மு.க. ஆட்சி’ என கர்நாடக பாணியைச் சொன்னார். அதன் பிறகு, துணை முதல்வர் பதவி என ஆந்திரா பாணியைச் சொன்னார். இரண்டுக்கும் எடப்பாடி பழனிசாமி ஒத்துக்கொள்ளவில்லை.

இந்த நிலையில்தான், ‘தனித்துப் போட்டி’ என பிரசாந்த் கிஷோர் மூலம் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. த.வெ.க. கூட்டணியில் பா.ம.க. இடம்பெற அதிக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள். சமீபத்தில்கூட அன்மணி ராமதாஸின் மகள் விஜய்யை சந்தித்தார். அன்புமணிக்கு விஜய்யும் பிறந்த நாள் வாழ்த்து கூறியிருந்தார். முன்னாள் மலைக்கோட்டை எம்.பி.யும் த.வெ.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துப் போட்டியிட காய் நகர்த்துகிறாராம். இதற்கு ராகுல் காந்தியும் தலையசைத்திருப்பதாக தகவல்கள் வருகிறது. எல்லாம், இன்னும் ஆறு மாதத்தில் தெரியவந்துவிடும். தமிழகத்தில் ஒருவேளை த.வெ.க., பா.ம.க., காங்கிரஸ் கூட்டணி அமைந்துவிடுமோ என்ற அச்சத்தில் (தி.மு.க., அ.தி.மு.க.) கழகங்கள் இருக்கிறது’’ என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal