தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்த நாள் நேற்று (மார்ச் 1) வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. நிர்வாகிகளை 3 மணி நேரத்திற்கும் மேல் நின்று வாழ்த்துகளைப் பெற்றுக்கொண்டார் ஸ்டாலின்.

தி.மு.க. இளைஞரணி மாநில துணைச் செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல் ஸ்டாலினுக்கு வழங்கிய பிறந்தநாள் பரிசுதான் அறிவாலயத்தில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

தூத்துக்குடி எஸ்.ஜோயல் உயர் ரக மரத்தினால் ஆன நினைவுப் பரிசை முதல்வர் ஸ்டாலிக்கு வழங்கினார். உயர்ரக மரத்தினால் ஆன நினைவுப் பரிசில், கடலுக்குள் கலைஞரின் பேனா நினைவுச் சின்னமும், அதன் அருகில் ஒரு படகு செல்வது போன்றும், கரையில் கலங்கரை விளக்கம் தெரிகிறது. அருகில் உள்ள தூண் ஒன்றில் மார்ச் 1 என பொறிக்கப்பட்டிருந்தது. மேலும், படகின் பக்கவாட்டில், ‘வெல்வோம் இருநுறு! படைப்போம் வரலாறு!’ என எழுதப்பட்டிருந்தது.

முதல்வர் மு.க.ஸ்டானுக்கு ஜோயல் நினைவுப் பரிசு வழங்கும் போது, தி.மு.க.வின் சீனியரானே துரைமுருகனே வியந்துபோய் பார்த்ததுதான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

தி.மு.க. மாநில இளைஞரணி துணைச் செயலாளர், உதயநிதியின் கண் அசைவில் பணிகளைச் சிறப்பாக செய்வதோடு, தலைவரின் பிறந்த நாளுக்கு மிகச் சிறப்பான நினைவுப் பரிசையும் வழங்கியிருக்கிறார் என அவரது ஆதரவாளர்கள் பெருமிதத்துடன் பேசிக்கொள்கிறார்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal