‘‘நான் சொல்வதை கலெக்​டர், எஸ்.பி. ஆகியோர் கேட்க வேண்​டும்’’ என்று திமுக மாவட்டச் செயலாளர் பேசி​யதாக வெளி​யாகியுள்ள ஆடியோ, சமூக வலைதளங்​களில் வைரலாகி வருகிறது.

தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக செயலா​ளராக சில நாட்களுக்கு முன்பு தர்மச்​செல்வன் நியமிக்​கப்​பட்​டார். அவர் தலைமை​யில் நேற்று முன்​தினம் தருமபுரி​யில் கட்சி செயற்​குழுக் கூட்டம் நடந்​தது. இதில் தர்மச்செல்வன் பேசி​யதாக வெளியான ஆடியோ, சமூக ஊடகங்​களில் வைரலாகி வருகிறது. அந்த ஆடியோ​வில், “நான் சொல்வதை கலெக்​டர், எஸ்.பி. கேட்க வேண்​டும். அனைத்து நிர்​வாகங்​களும் நான் சொல்​வதைத் தான் கேட்க வேண்​டும். இங்கே கேம் ஆட இடம் கிடை​யாது. எவனும் கேம் ஆட முடி​யாது. ஆடினால் அவன் கதை முடிந்​தது. ‘நீ சொல்றதை கேட்​கலைனா, அதிகாரிகள் உள்ளிட்ட யாராக இருந்​தா​லும் உன் லெட்டர் பேடில் எனக்கு லெட்டர் கொடு’ என்று தலைவர் கூறி​யுள்​ளார்.

முன்பு எப்படி நடந்​திருந்​தா​லும் சரி, இனி அரசு நிர்​வாகங்​களில் நடக்​கும் அனைத்​தும் எனக்​கும், ஒன்றியச் செயலா​ளர்​களுக்​கும் தெரிய வேண்​டும். மாவட்ட பொறுப்பு அமைச்​சரிட​மும் இதுகுறித்து நான் தெரி​வித்து விடு​கிறேன்” என்று உள்ளது.

இதற்கிடையில், திமுக மாவட்டச் செயலாளருக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில், திமுக அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் குறுநில மன்னர்களைபோல செயல்படுவதாகத் தெரிவித்து உள்ளனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal