ஜெ. பிறந்த நாளை முன்னிட்டு சேலத்தில் நடந்த ரத்ததான முகாமில் கலந்துகொண்ட இளைஞர்களுக்கு அ.தி.மு.க. மாநில மருத்துவர் அணி இணைச் டாக்டர் சரவணன் ரூ.1 லட்சத்துக்கான விபத்துக் காப்பீடு செய்ததோடு, மருத்துவ முகாமில் ரூ.50 ஆயிரத்திற்கான மருந்துகள் மற்றும் உபகரணங்களை வழங்கியிருக்கிறார்.

முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 77 வது பிறந்த நாளை முன்னிட்டு சேலம் புறநகர் மாவட்ட கழகம் மற்றும் புறநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது. சேலம் அயோத்தியாபட்டினம் பகுதியில் நடைபெற்ற இந்த ரத்ததான முகாமில் அதிமுக பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி வைத்து தொடங்கி வைத்தார்.
சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளர் இளங்கோவன் தலைமையில், மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகரன், சட்டமன்ற உறுப்பினர்கள் சித்ரா, மணி, ராஜ முத்து, ஜெய்சங்கரன், நல்லதம்பி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சிவபதி, மாநில மருத்துவர் அணி துணை செயலாளர் மருத்துவர் சரவணன், கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் நடிகை கௌதமி உள்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சேலம் புறநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் அருண் இந்த ரத்ததான முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
ரத்ததான முகாமில் மதுரையைச் சேர்ந்த அ.தி.மு.க. மருத்துவர் அணி மாநில இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் கலந்துகொண்டார். பின்னர், ரத்ததான முகாமில் பங்கேற்றவர்களுக்கு ரூ.1 லட்சத்திற்கான விபத்துக் காப்பீடு திட்டத்தையும் செய்து கொடுத்திக்கொடுத்திருக்கிறார். மேலும், முகாமில் மருந்து பொருட்கள் மற்றும் மருத்து உபகரணங்களையும் வழங்கியிருக்கிறார்.
இந்த முகாமில் கலந்துகொண்ட இளைஞர் ஒருவரிடம் பேசினோம். ‘‘சார், இன்றைக்கு தமிழகத்தில் நாளுக்கு நாள் விபத்துக்கள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில்தான் டாக்டர் சரவணன், எங்களுக்கு ரூ.1 லட்சத்திற்கான மருத்துவ காப்பீடுகளை செய்து, எங்களது குடும்பத்தில் ஒளியேற்றியிருக்கிறார்’’ என்று பெருமிதத்துடன் கூறினார்!
தமிழகத்தில் மருத்துவரின் சேவை தொடரட்டும்..!