தமிழக அரசியல் களத்தில் ஆளும் கட்சியான தி.மு.க.வை கடுமையாக விமர்சித்து வரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்.
72வது பிறந்தநாளை கொண்டாடும் முதல்வர் ஸ்டாலினுக்கு தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் ‘‘தமிழக முதல்வர் ஸ்டாலின் நீண்ட ஆயுளும், பூரண ஆரோக்கியமும் பெற வாழ்த்துவதாக’’ அவர் பதிவிட்டுள்ளார். அதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.