இன்று பிறந்தநாள் கொண்டாடும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
72வது பிறந்தநாளை கொண்டாடும் முதல்வர் ஸ்டாலின், சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார். இதற்கிடையே, பிறந்தநாளையொட்டி அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கையை , முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இன்று பிறந்தநாள் கொண்டாடும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற வாழ்த்துகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியும், முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர், ‘பூரண ஆரோக்கியத்துடனும், சந்தோஷத்துடனும், தமிழக மக்களுக்கு சேவை ஆற்றிட முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து’ என கூறியுள்ளார்.
முதல்வர் பிறந்த நாள் முன்னிட்டு, தி.மு.க., சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.