முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளை இன்று தமிழகம் முழுவதும் உடன் பிறப்புக்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் அமைச்சரும், சுற்றுச் சூழல் அணியின் மாநிலத் தலைவருமான பூங்கோதை ஆலடி அருணா, முதல்வரின் ஆளுமையையும், உழைப்பையும் வெளிப்படுத்தும் விதமாக வித்தியாசமான முறையில் கேக் தயாரித்திருப்பதுதான் உடன் பிறப்புக்களை வியக்க வைத்திருக்கிறது.

தவிர முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளில் பூங்கோதை ஆலடி அருணா தனது வலைதளப்பக்கத்தில், ‘‘ஒளிம்பிக் ஒளிச்சுடரல்ல’ என்ற தலைப்பில்,

‘‘பெரியார் ஏற்றிய தீப்பந்தம்
இறுகப்பற்றி ஒடினார் அண்ணா இராண்டுகள்
கடமை கண்ணியம் கட்டுப்பாடுடன்
அண்ணாவின் வழியில் அயராத உழைத்து
தணலென தீப்பொறிகள் உடலினை பொசுக்கியபோதும்
தளராத அரைநூற்றாண்டு ஏந்தி
தமிழை செம்மொழியாக செதுக்கியவர்!

இதோ இன்று…
தமிழனின் செழுமை தொன்மை பராம்பரியத்தை பறைசாற்றினார்
இரும்பின் பிறப்பிடத்தை கண்டெத்த
எங்கள் திராவிட ஒளிச்சுடர்
தீப்பந்தம் கதகதப்பில் வாழாமல்
தீ பிழம்பின் வெட்பத்தில்
ஒயாயமல் ஒடும்
திராவிடம், தமிழினம், தமிழ்மொழி இறையாண்மை, சமூகநிதி, மாநில உரிமைகள காத்திட…

நான்காண்டிற்கு ஒரு முறை ஒளிச்சுடர்
ஒலிம்பிக் தீப்பந்து அல்லவே
பெரியார் ஏற்றிய ஒளிவிளக்கு
அண்ணாவின அணையா விளக்கு
கலைஞரின் கலங்கரை விளக்கு!

234/234 வெற்றி வாகை சூட்டி
திராவிட மாடல் தமிழகத்தை
மீண்டும் முன்னெடுத்து செல்ல
ஓடி ஓடி ஓடி உழைப்போம்
அகவை 72 இல்
அடியெடுத்து வைக்கும்
கரும்பு மனம் கொண்ட
இரும்பு தலைவன் இதயம் குளிர்ந்திட!

அறவழியில்,
பூங்கோதை ஆலடி அருணா
மாநில சுற்றுசூழல் அணித்தலைவர்’’ என்று பதிவிட்டிருக்கிறார்.

தவிர, பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் வழக்கம் போல முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி மகிழ்விக்க இருக்கிறார் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal