இந்திய அளவில் தவிர்க்க முடியாத பெண் தலைவர்களில் ஒருவர் ஜெயலலிதா. தமிழக அரசியலில் தனக்கென தனி முத்திரை பதித்து பெண் ஆளுமையாக வலம் வந்தவர். எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அதிமுகவின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற ஜெயலலிதா அந்த கட்சியை சிறப்பாக வழி நடத்தியதோடு 6 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல் நலக்குறைவின் காரணமாக காலமானார். இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இன்று 77வது பிறந்தநாள். இதனை முன்னிட்டு அதிமுகவினர் ஜெயலலிதா அம்மையாருக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகளும் வழங்குகிறார்கள்.

அதன்பிறகு தமிழ்நாடு அரசின் சார்பில் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு பாராட்டு விழா மற்றும் மரியாதை செய்யப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். இந்நிலையில் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு தன்னுடைய எக்ஸ் பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில் சிறந்த தேசியவாதியாக திகழ்ந்தவர். ‘‘ மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை பயன்படுத்தியவர். அவருடைய புகழ் என்றும் நிலைத்திருக்கும்’’ என்று பதிவிட்டுள்ளார். மேலும் அண்ணாமலை ஜெயலலிதா பிறந்த நாளுக்கு வாழ்த்து சொன்னது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal